வரிக்குதிரைகளுக்கு வரிகள் வந்தது எப்படி ?


Plains Zebra

வரிக்குதிரைகளுக்கு ஏன் வரிகள் வந்தன ? ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து ஏன் இவ்வளவு உயரமாக இருக்கிறது ? யானை ஏன் பெரிதாக இருக்கிறது ? இப்படி குழந்தைகள் இயற்கை சார்ந்து கேட்கும் ஆயிரமாயிரம் கேள்விகளுக்கும் பெரும்பாலான பதில் பரிணாம வளர்ச்சியை சார்ந்தே இருக்கிறது. அவ்வாறு பரிணாம வளர்ச்சி மூலம் உயிரினங்கள் தங்களை தக்கவைத்துக்கொள்ள ஏற்படுத்திய மிகப்பெரிய ஆயுதம் உருமறைத் தோற்றம் [Camouflage]. இந்த படத்தில் இருக்கும் பக்கி [Jungle Nightjar] என்ற பறவை எவ்வாறு உருமறைத் தோற்றம் கொண்டுள்ளது என்று பாருங்கள்.
Jungle Nightjar : Thanks to Magesh Ramasamy for the Photograph


வரிக்குதிரைகளுக்கு வரிகள் இருக்க காரணம் வேட்டை விலங்குகளான சிங்கம், சிவிங்கப்புலி [Cheetah] போன்றவற்றிடம் இருந்து தப்பிக்கவே என்று நம்பப்பட்டது. அதன் உடலில் இருக்கும் வரிகள் வரிக்குதிரைகள் கூட்டமாக செல்லும் போது வேட்டை விலங்குகளை குழப்புமென்றும் அதனால் வரிக்குதிரைகள் தப்பிவிடும் என்றும் சொல்லப்பட்டது.


Gravy's Zebra


ஆனால் வரிக்குதிரைகளின் உடலில் வரிகள் இருக்க காரணம் சிங்கம் அல்ல. ஒரு வகையான ஈ [Tsetse Fly] என்றால் நம்ப முடிகிறதா? ஆப்ரிக்காவில் இருக்கும் இந்த ஈக்களின் கண்கள் [Compound Eyes] வரிகள் கொண்ட எந்த பொருளின் மீதும் சென்று அமர ஏற்றதாக இல்லை. அதிக நோய்த்தொற்றை ஏற்படுத்தி வரிக்குதிரைகளுக்கு சவாலாக இருத்திருக்கவேண்டிய  இந்த ஈக்களிடம் இருந்து தப்பிக்கவே பரிணாம வளர்ச்சி இப்படி ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறது. Taxidermy Specimen of Plains Zebra at Berlin Natural History Museum
Post a Comment

6 Comments

 1. மிக தெளிவான விளக்கம்,
  பலருக்கும் தெரியாத நல்ல
  அறிவியல் விளக்கம்.
  சபாஷ் சதீஸ்... வாழ்த்துகள்.
  தொடரட்டும் உங்கள்
  இயற்கைச்சூழலின்
  நெடும்பயணம்.
  பாராட்டுக்கள்.

  ReplyDelete
 2. இந்த காட்டுப்பக்கியை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக இருந்தது.. இந்த படம்எடுக்கும் போது நானும் அருகில் இருந்தேன் எனபது மகிழ்வான தருணம்...

  ReplyDelete
 3. பெரிய செய்தி,
  இப்போது தான் தெரியும்

  ReplyDelete