உலகின் மிகப்பெரிய கிளி இதுதான். ஆனால் ?? [Hyacinth Macaw]

உலகில் வாழும் கிளி இனங்களில் மிகப்பெரியது Hyacinth Macaw. தென் அமெரிக்காவின் அமேசான் காடுகளில் காணப்படும் இந்த கிளிகள் தற்போது அழிவை சந்தித்து வருகின்றன. அதற்கு முக்கிய காரணம் அதன் வாழிடம் அழிக்கப்படுவதே. இதன் வாழிடம் அழிக்கப்படுவதற்கு காரணம் ஜெர்மனியின் உணவுப் பழக்கம் என்பது தான் நாம் கவனிக்க வேண்டியது. ஜெர்மனியர்களின் முக்கிய உணவான பன்றிக்கறி பிரேசிலில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் டன் கணக்கில் இறக்குமதி செய்யப்படுகிறது. ஜெர்மனியின் காலச் சூழல் அங்கே பன்றிகளை வளர்க்க போதுமானதாக இல்லை. எனவே அவை பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. Taxidermy Specimen of Hyacinth macaw at Berlin Natural History Museum

அமேசான் மழைக்காடுகளில் உள்ள வளமான மண் பன்றிகளை வளர்க்கவும், அவற்றின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யவும் உதவியாக இருப்பதால் மழைக்காடுகள் பன்றிகள் வளர்ப்புக்காக அழிக்கப்படுகின்றன. 

Taxidermy Specimen of Hyacinth macaw at Berlin Natural History Museum

சுமார் 2 கிலோ எடையுடன் 90 ஆண்டுகள் உயிர் வாழக்கூடிய இந்த பறவையினம் தனது வாழிடத்தை இழந்து வருகிறது. ஜெர்மானியர்கள் தங்கள் உணவுப் பழக்கத்தை கொஞ்சம் மாற்றிக்கொண்டால் பல்லாயிரம் ஆண்டுகளாக பரிணமித்த இந்த பறவையினம் தப்பிப்பிழைக்கும்.  

Post a Comment

0 Comments