நதியின் ஓவியம் எப்படி இருக்கும் ?


நதியை ஓவியமாக்கிட
கேட்டிருந்தார் ஆசிரியர்.

அவரவர் விருப்பம் போல
வரையத் தொடங்கின குழந்தைகள்.

ஓவியா வரைந்த நதி
காடுகளின் நடுவே சென்று கொண்டிருந்தது.

அணையிலிருந்து வெளிவரும் நதி ஒன்றை
வரைந்து கொண்டிருந்தான் கார்த்திகேயன்.

நகரங்களின் நடுவே சென்று கொண்டிருந்தது
நான்ஸி வரைந்த நதி.

பூங்குழலி சாக்கடை ஒன்றை
வரைந்து வைத்தாள்.

நதியின் மணல் பரப்பில்
லாரி செல்வது போல வரைந்தான் அமீர்.

நீண்ட நேரம் ஆகியும்
என்ன வரைவது என தெரியாமல்
யோசித்துக் கொண்டிருந்தாள்  யாழினி.

மேலும் சில சூழலியல் கவிதைகள் :

Post a Comment

6 Comments

 1. யோசிக்கிறேன்... ரசிக்கிறேன்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. So beautiful, semma deep thought, very touching... I want this to become popular to reach larger audience... Keep it up...

  ReplyDelete
 3. கவிதை வடிவில் கனமான சிந்தனையை விதைத்திருக்கிறீர்கள்! நதிகள் எங்கே போகிறது என்று தேடியது போய், இனி நதிகள் எங்கே போனது என்று தேடும் நிலைமை வரவே கூடாது.

  ReplyDelete