அண்ணா ஹசாரே - அப்துல் கலாம் : இணைவார்களா?

எகிப்திலும், லிபியாவிலும் நடந்த புரட்சிகளை பார்த்துக்கொண்டு உலகை காப்பாற்றப் போவதாக சொல்லிக் கொண்டு ஓடிவந்த அமெரிக்காவுக்கும், பிரிட்டனுக்கும், இந்தியாவில் அண்ணா ஹசாரே தொடங்கியிருக்கும் அறப்போராட்டம் ஆச்சர்யங்கள் நிறைந்ததாகவே இருக்கும்.


 மூன்றே நாட்களில் ஒட்டு மொத்த தேசத்தையும் திரும்பி பார்க்க வைத்ததோடு இல்லாமல், மக்கள் அனைவரையும் ஒரே புள்ளியில் இணைத்திருக்கிறார் ஹசாரே. நாட்டின் பல்வேறு இடங்களிலும் நடக்கும் இந்த உண்ணாவிரத போராட்டம், சுதந்திர இந்தியாவில் நாம் பார்த்திராத ஒன்று.


மக்கள் கூட்டம் கூடிக் கொண்டே போகிறது. வட இந்திய ஊடகங்கள் இருபத்தி நான்கு மணி நேரமும் பேசிக்கொண்டே இருக்கின்றன. தமிழ் நாட்டில் இதை பற்றி பேச யாரும் தயாராக இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. நேரம். மத்திய அரசு அண்ணாவின் கோரிக்கைகளுக்கு பணிதாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அல்லது கட்டாயம் ஏற்படும் சூழ்நிலைக்கு தள்ளப்படும்.அப்துல் கலாம் இதற்கு ஆதரவு கொடுத்தால் இன்னும் மிகப்பெரிய அறப்போராட்டமாக இது மாறக் கூடும். நான் அப்துல் கலாம் அவர்களை பங்கேற்க்கச் சொல்லி மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். நீங்களும் குரல் கொடுங்கள். சந்தர்ப்பங்கள் கிடைப்பது அரிது. பயன்படுத்திக்கொள்வோம்

Post a Comment

0 Comments