யார் மிருகம் : சிறுத்தை புலியா? மனிதர்களா?

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி, தாம்தர் என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள், ஒரு சிறுத்தை புலியை உயிருடன் வைத்து எரித்திருக்கிறார்கள். முன்னதாக சிறுத்தை புலியை பிடித்து காட்டுக்குள் விடுவதற்காக, ஒரு கூண்டை தயார் செய்து, அந்த ஊர் அருகில், வனத் துறையினர் வைத்துள்ளனர். அவர்கள் எதிர்பார்த்தபடியே சிறுத்தை புலி கூண்டுக்குள் சிக்கியது.கூண்டை எடுத்துக்கொண்டு வனத் துறை அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பும் போது, கிராமத்தை சேர்ந்தவர்கள், வனத் துறையினரை முற்றுகையிட்டு, கூண்டை கைப்பற்றி விட்டனர். அதன் பிறகு, கற்களை எரிந்து அந்த சிறுத்தை புலியை தாக்கத் தொடங்கிவிட்டனர். பிறகு மண்ணெண்ணெய் ஊற்றி கூண்டை பற்ற வைத்துவிட்டனர். சிறிது நேரத்தில், அந்த சிறுத்தைபுலி துடிதுடித்து உயிரைவிட்டது.இத்தனைக்கும், அந்த சிறுத்தைபுலி யாரையும் தாக்கி கொன்றதில்லை. அதை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், இந்த சிறுத்தை புலி மனிதர்களை உணவாக கொண்டதில்லை எனவும் தெரிவித்துள்ளார்கள். இந்த சம்பவத்தால் பத்து பேரை கைது செய்திருக்கிறார்கள்.


கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். உண்மையில் யார் மிருகம்? சிறுத்தை புலியா? இல்லை மனிதர்களா?Post a Comment

0 Comments