பலம் சேர்க்கிறது எஸ்.ரா-வின் எழுத்துக்கள்

என்னுடைய அன்பிற்க்கும் மதிப்பிற்க்கும் விருப்பத்திற்கும் உரிய எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள், வரும் மார்ச் 20  ஆம் தேதி நடக்கவுள்ள சிட்டுக்குருவிகள் தினம் பற்றிய செய்தியை அவருடைய இனணயத்தில் வெளியிட்டிருப்பது மிகப்பெரிய ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கிறது.

இயற்கையின் மீதான அவரது பார்வை முற்றிலும் புதியதாகவும், ஆச்சர்யங்கள் நிறைந்ததாகவும் எப்போதும் இருக்கிறது. யானையின் பிரம்மாண்டத்தை விடவும் எறும்பின் பிரமாண்டத்தை வியக்கும் இவரது எழுத்துகள், இயற்கையின் மீதான புதிய பார்வையை  நமக்கு உணர்த்துகிறது. இன்றைய சூழ்நிலையின், காட்டில் இருக்கும் விலங்குகளும், பறவைகளும் அழிவதை பற்றியே கவலைப்படாத மனிதர்களுக்கு மத்தியில், கதைகளிலும் நாம் அவற்றை தொலைத்துக்கொண்டு வருவதை பற்றி வருத்தப்படுகிற ஒரு மனிதரை, "இயற்கையின் காதலன்" என்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்லி விட முடியும்?

Post a Comment

0 Comments