விஜய் தொலைக்காட்சியின் "Little Big Film Maker"

  

 குழந்தைகளின் புதுமையான சிந்தனைகளுக்கும், கற்பனைகளுக்கும் விடையளிக்கிறது விஜய் தொலைக்காட்சியின் "Little Big Film Maker". குழந்தைகளை கொண்டு உருவாக்கப்படும் இந்த குறும்படங்கள், எளிதில் குறை சொல்ல முடியாதபடி மிகவும் சிறப்பாகவே இருக்கிறது. சிந்தனைகளை குறுகிய வட்டத்துக்குள் வைத்துக்கொள்ள அவசியம் ஏதுமில்லை என்பது, இந்த நிகழ்ச்சியை பார்க்கும் குழந்தைகளுக்கும் எளிதில் புரியக் கூடும்.

திரைக்கு பின்னால் யாரோ ஆடுகிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த குழந்தைகளின் எண்ணங்கள் மறைந்து இன்று குழந்தைகள் இயக்குனர் அவதாரம் எடுப்பது, வருங்கால தலைமுறையின் மீதான மிகப் பெரிய நம்பிக்கையாக இருக்கிறது. "கறை நல்லது" என்பதோடல்லாமல், "பசுமை நல்லது" என்றும் படங்களை இயக்கினால் மிகப் பெரிய விழிப்புணர்வாக இருக்கும்.

Post a Comment

0 Comments