துர்கா என்கிற யானைக்குட்டி

எழுபது வயதில் முதுமையடையும் யானைக்கு 

ஐந்து வயதென்பது குழந்தைப்பருவம்.

சேற்றில் விளையாடி 

சக தோழமைகளுடன் சண்டையிட்டு 

துதிக்கையை காற்றிலேந்தி 

அம்மாவின் வால்பிடித்து 

கட்டைகளை உருட்டி 

களிப்புறக் காடுதிரிய வேண்டிய குட்டியை,

அதன் கூட்டத்திலிருந்து பிரித்து

லாரியில் ஏற்றி 

இரும்புக் கம்பிகளில் அடைத்து 

மூவாயிரம் கிலோமீட்டர் பயணிக்க வைத்து 

கோவிலொன்றில் சங்கிலியால் பிணைத்தபிறகு

அதனோடு சுயபடம் எடுப்பவர்கள்,

கொள்ளை அழகென்று  பேசிச்  சிரிக்கிறார்கள்.

நான் உயிர்வதை என்கிறேன்.

Post a Comment

0 Comments