கூண்டுக்கிளிக்கு தின்னப்பழம் தந்து
தன் கருணையே பெரிதென நம்பும் ஒருவன்,
அதனிடம் கூடுதலாய் அன்பு செய்ய
அதன் சிறகுகளை வெட்டிவிடுகிறான்.
கூண்டையே வகுப்பறையாக்கி
தன் கருணையை பாடம் எடுக்கிறான்.
அன்பு முழுமையடைவதை
தருபவர்களால் தீர்மானிக்க முடியாது.
அது பெறுபவர்களால் எழுதப்படும் தீர்ப்பு.
ஒரு பறவையின் மீது செலுத்தப்படும்
அன்பென்பது,
அதன் கூண்டுக்கதவை திறந்துவிடுவது.
அதன் வானத்தை திருப்பித்தருவது.
அது வலசை செல்லும் பாதையில்
போர் செய்யாமல் இருப்பது.

0 Comments