தமிழ்நாட்டு பல்லுயிரியம்

இப்படி ஒரு நிகழ்ச்சியை தொடங்கலாம் என்று சொன்னபோது, மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்ட செழியன் அவர்களுக்கு மிக்க நன்றி. எந்த மாவட்டத்தில் தொடங்கலாம், யாரை வைத்து தொடங்கலாம் என யோசித்து முடிவு செய்வதில் கொஞ்சம் தயக்கம் இருந்தது. திண்டுக்கல் மாவட்டம் பற்றி நீங்களே பேசுங்கள் என்று ஊக்கம் அளித்தார். திண்டுக்கல்லில் தொடங்கிய பயணத்தை செழியன் அவர்கள் ராணிப்பேட்டையில் முடித்துவைத்தார். திண்டுக்கல்லுக்கும் ராணிப்பேட்டைக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டு மாவட்டங்களும் தோல் தொழிற்சாலை கழிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்கள். இப்படி ஒவ்வொரு மாவட்டமும் பல்வேறு சூழல் பிரச்சைகளை சந்திப்பது வருத்தத்திற்குரிய செய்தி. இடைப்பட்ட நாள்களில் ஒவ்வொரு மாவட்டத்தின் பேச்சாளர்களையும் அணுகி, இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடிக்க, தமிழ்நாட்டு சூழல் மீது அக்கறை கொண்ட பலரும் உதவி இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி. இந்த தொடர் நிகழ்வு பலரையும் ஒரே தளத்தில் இணைத்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி. இந்த நிகழ்ச்சிகள் விரைவில் Youtube-ல் பதிவேற்றம் செய்யப்படும்.



Post a Comment

0 Comments