நினைவடுக்குகளில் நிறைந்திருக்கும்
பறவையினங்களை எண்ணிப்பார்க்கிறேன்.
நான் அவதானித்த பொழுதுகளை,
உடன் பயணித்த தோழர்களை,
காத்திருந்த தருணங்களை,
என எல்லாமும் நினைவுகளில் சிறகடிக்கின்றன.
அந்திநேரத்தில் அணிவகுக்கும்
அன்றில் பறவைகளை,
ஆலமரத்தில் உருமறை கொள்ளும்
குக்குறுவான் குருவிகளை,
என எல்லாவற்றையும்
என் நினைவிலிருந்து மீட்டெடுக்க முடியும்.
அற்றுப்போன பறவையினங்களை,
அருங்காட்சியங்களில் பார்த்த நினைவுகள் மட்டும்,
பற்றி எரியும் ஒற்றை இறகாக,
காற்றில் அலைகிறது.

0 Comments