கொடைக்கானல் குல்லா - வாசிப்பனுபவம் 7 - திரு. வாழைக்குமார்

நேற்று பறவையிலாளர் திரு.ஜெகநாதன் அவர்கள் வழியாக 'கொடைக்கானல் குல்லா' எனும் சிறார் நூல் கிடைக்கப் பெற்றேன். ஆனால் இந்நூல் வெளியாவதற்கு முன்பிருந்தே அது வெளியிடப்பட்டு விற்பனைக்கு உள்ளது வரைக்கும் அனைத்தையும் முகநூல் வழியாக அறிந்து வைத்திருந்தேன். நான் வாங்க வேண்டும் என நினைத்திருந்த புத்தகம் திடீரென கைக்கு கிடைத்தால் என்ன நடக்கும்? சிறார் மனநிலையில் உடனே வாசித்து முடித்து விட்டேன்.

கொடைக்கானலுக்கு சுற்றுலாவுக்கு கிளம்பும் ஒரு குடும்பம் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அதை சூழல் சுற்றுலாவாக மாற்றி, மகிழ்ந்து, இயற்கைக்கு கேடு நேராமல் எப்படி ஊர் திரும்பினார்கள் என்பதுதான் கதை.
சிறார்களுக்கான கதைதான் 'கொடைக்கானல் குல்லா'. ஆனால் குழந்தைகள் எப்போதும் சுற்றுச்சூழலுக்கு எதிரானவர்கள் அல்ல. என்னைப் பொறுத்தவரை இந்தப் புத்தகம் பெற்றோர்களுக்கான பாலபாடம். நடிகர்களை விட பெற்றோர்களே குழந்தைகளுக்கு ரோல் மாடலாக விளங்க வேண்டும் என்றால் இந்தப் புத்தகத்தை அனைவரும் வாசிக்க வேண்டும் என்பேன்.
இந்தக் கதையில் குழந்தை எதிர்கொள்ளும் அத்தனை பேரும் ரோல் மாடல்களாக வலம் வருகின்றனர். அதுதான் இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் அவசியம் என்றும் கருதுகிறேன்.
குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் ஏழு பறவைகள், ஐந்து தாவரங்கள், ஐந்து விலங்குகளை சுற்றுச்சூழல் நோக்கத்தோடு அறிமுகப்படுத்துங்கள். பின்பு அவர்களே நிறைய கற்றுக் கொண்டு இந்தப் பூவுலகை பாதுகாத்துக் கொள்வார்கள் என்பதுதான் இந்தக் கதையின் ஆரம்பப்புள்ளி என்று நினைக்கிறேன்.
வாழ்த்துகள் சதீஷ் முத்துக் கோபால்.

------------------------

நண்பர் வாழைக்குமார் அவர்களின் வாசிப்பு அனுபவத்திற்கு மிக்க நன்றி.




Post a Comment

0 Comments