சிவகாசியில் உள்ள இராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி), இளங்கலைத் தமிழ்த்துறை முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான பாடத்திட்டத்தில், தூவி நூலில் இடம்பெற்றுள்ள அனைத்து கவிதைகளும் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் போது, பறவைகளின் தமிழ் பெயர்களும், அவற்றின் வாழிடச் சூழலும் இன்னும் ஆழமாக விவாதிக்கப்படும். மாணவிகளிடையே இது விழிப்புணர்வை உருவாக்கும் என்று நம்புகிறேன்.
என்னுடைய கவிதைகளை பாடத்திட்டத்தில் சேர்த்த கல்லூரி நிர்வாகத்திற்கு என் மனமார்ந்த நன்றி.
0 Comments