அருமை நண்பர் Satheesh Muthu Gopal ஆங்கிலத்தில் எழுதிய அவரது இயற்கை பயணங்களின் கட்டுரைகள் நூலுக்காக எனது shieldtail பாம்பின் புகைப்படம் கேட்டிருந்தார்.
அனுப்பிவிட்டு அதை மறந்துவிட்டேன். பின்னர் ஒரு நாள் அந்த நூலை எனக்கு அனுப்பியிருந்தார். முதல்முறை நான் எடுத்த புகைப்படம் புத்தகத்தில் இடம் பெறுவது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. இன்னும் பல நண்பர்களின் புகைப்படங்களையும் பார்த்து ரசித்தேன்.
இந்த நூலில் தனது இயற்கை சார்ந்த பயணங்களின் ஊடாக பழனி மலைத்தொடர் மற்றும் பல இயற்கை சூழல்கள் எவ்வாறு அழிந்து வருகிறது என்பதையும் அழகாக சொல்கிறார்.
இயற்கை ஆர்வம் உடையவர்களுக்கும், போது மக்களும் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. அழகான புகைப்படங்களுடன் தெளிவான நடையில் அவருக்கே உரித்தான பாணியில் எழுதியிருக்கிறார். இயற்கை நேசிப்பாளனாக அவரின் வலி ஒவ்வொரு வரிகளிலும் தெரிகிறது.
அனைவரும் கட்டாயமாக படிக்க வேண்டிய கட்டுரைத்தொகுப்பு.(புத்தகம் வந்து ஒரு மாசம் ஆச்சு. எனக்கு தான் எழுத நேரம் கிடைக்கவில்லை😅)
Available in Amazon
0 Comments