சுதந்திர தினத்தன்று, கம்பம் நகரில் நடைபெற்ற "பாரதி தமிழ் இலக்கியப் பேரவை" விழாவில், "பல்லுயிர்களுக்கானது பூமி" நூலுக்கான பரிசைப் பெற்றுக் கொண்டேன். நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிறுவர்களின் சிலம்பாட்டம், ஒயிலாட்டம் எனத் தொடங்கிய நிகழ்வில் பலரும் கெளரவிக்கப்பட்டார்கள். அரிக்கொம்பன் யானையை மையப்படுத்தி நடைபெற்ற நாடகம் சிறப்பாக இருந்தது.
"பாரதி தமிழ் இலக்கியப் பேரவை" தலைவர் திரு. பாரதன் அவர்கள் துடிப்புடன் செயலாற்றினார். பரிசு வழங்க விழா நுழைவாயிலில் இருந்து அழைத்து வந்து மேடையில் அமரவைத்தார்கள். பாரதியார் வேடம் அணிந்திருத்தவர் தலைப்பாகை வைத்து மரியாதை செய்தார். இது போன்று படைப்பாளர்களை கெளரவிக்கும் நிகழ்வை எங்கும் பார்த்ததில்லை.
இன்னும் நான் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உண்டு. இந்த நிகழ்வு அதற்கு ஊக்கம் அளிக்கிறது. "பாரதி தமிழ் இலக்கியப் பேரவை" அமைப்புக்கு மீண்டும் என் நன்றிகள்.
1 Comments
வாழ்த்துக்கள் அண்ணா 💐
ReplyDelete