தாராபுரம் புத்தகத் திருவிழா 2025

சமீபத்தில், மெட்ரோவில் பயணம் செய்து கொண்டிருந்த போது, ஒரு குழந்தையின் கையில், கைப்பேசி இல்லாமல் இருந்தது. அதன் முகத்தை யாரும் கவனிக்கவில்லை. நான் அந்தக் குழந்தையை பார்த்தேன். தன்னை ஒருவர் கவனிக்கிறார் என அறிந்ததும், அந்தக் குழந்தை மகிழ்ச்சி அடைகிறது. கைப்பேசியை பார்த்தபடியே அனைவரும் பயணம் செய்கிறார்கள். குழந்தைகளின் கையில் ஒரு கைப்பேசியை கொடுத்துவிட்டு, தானும் அதிலேயே மூழ்கிப்போகிறார்கள். சக மனிதர்களிடம் இருந்து, ஒரு புன்னகையைக் கூட பெற முடியாத சூழலில், நாம் குழந்தைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். 

திரைப்படங்கள், அது சார்ந்து நடத்தப்படும் நிகழ்ச்சிகள், Cricket போட்டிகள், OTT , Standup Comedy எனப் பல்வேறு பொழுபோக்குகளுக்காக மக்கள் தங்கள் நேரத்தையும், பணத்தையும் செலவு செய்யத் தயாராக இருக்கிறார்கள். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெரு நகரங்களில் நடத்தப்படும் புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு அரங்கு அமைப்பதே சவாலான காரியம் தான். தாராபுரம் மாதிரியான சிறிய நகரங்களில் நடத்தப்படும் புத்தகத் திருவிழாவில், சூழலியல் நூல்களுக்கென்று அரங்கு அமைப்பதற்கு, சூழலியல் மீதான அக்கறை இருந்தால் மட்டுமே முடியும். தோழர் திரு.ரமேஷ் அவர்களின் இந்த முயற்சி வெற்றிபெற மனதார வாழ்த்துகிறேன். புத்தகங்களின் மூலமாக சூழலியல் சார்ந்த விழிப்புணர்வை உருவாக்கி, மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று அவர் நம்புகிறார். 

பழனியை சேர்ந்த என் நண்பர்களுக்கும் அன்பான வேண்டுகோள். வாய்ப்பிருந்தால் உங்கள் குழந்தைகளை இந்த புத்தகத் திருவிழாவிற்கு அழைத்துச் செல்லுங்கள். அரங்கு எண் 21-ல் என்னுடைய சூழலியல் நூல்களும் கிடைக்கும்.




Post a Comment

0 Comments