Shades of Habitat - Review by Sadham

பழனியை சேர்ந்த சூழல் ஆர்வலரும், சூழலியல் எழுத்தாளரும் திரு.சதிஸ் முத்துகோபால் Mr. Satheesh Muthu Gopal. அவர்கள் எழுதிய “SHADES OF HABITAT” புத்தகத்தை படித்தேன். பழனி மலைகளின் பல்லுயிர் சூழல் குறித்து அவர்கள் எழுதியுள்ள விதம் என்னை மிகவும் கவர்ந்தது. திரு.சதீஸ் முத்துகோபால் அவர்கள் தூவி,யாருக்கானது பூமி, பறவைகளின் உயிர்ச்சூழல், பல்லுயிர்களுக்கானது பூமி, கொடைக்கானல் குல்லா போன்ற சிறந்த சூழலியல் புத்தகங்களை எழுதியுள்ளார். அதன் வரிசையில் "SHADES OF HABITAT" என்ற புத்தகத்தின் மூலம் பழனி மலைகளின் இயற்கை அழகையும், அங்கு வாழும் உயிரினங்களின் முக்கியத்துவத்தையும் மீதமிருக்கும் அரிய உயிரினங்களின் வாழ்விட இழப்பையும் அவற்றை பாதுகாப்பது பற்றியும் மிகத் தெளிவாகவும், ஆழமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்துள்ளார்கள்.

இந்த புத்தகம் வெறும் தகவல்களின் தொகுப்பாக இல்லாமல், ஒரு சூழலியல் குறிப்புகளுடன் வழிகாட்டி போல உயிரோட்டத்துடன் உள்ளது. ஒவ்வொரு அத்தியாயமும், தனித்துவமான தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிர்களின் வாழ்க்கையையும் தற்போது அவைகள் இழந்துவரும் வாழ்விடங்களையும் கண்முன் நிறுத்துகிறது. குறிப்பாக, பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதன் அவசியமும், வாழ்விடச்சிக்கல்கள் குறித்த அவர்களின் கருத்துகள் சிந்திக்க வைப்பதாக உள்ளன.

பழனி மலைத்தொடரின் பல்லுயிர்களை ஆவணப்படுத்த அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது. இந்தப் புத்தகம், சுற்றுச்சூழலின் மீதும், இயற்கையின் மீதும் ஆர்வமுள்ள அனைவருக்கும் ஒரு பொக்கிஷம்.

இத்தகைய ஒரு சிறந்த படைப்பைத் தந்தமைக்கு நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.




Thank you Sadham.!!!


Post a Comment

0 Comments