அதுவே ஒரு புதிய முயற்சியை செய்வதாக இருந்தால், அதுவும் தமிழ் நாட்டில் யாரும் செய்திராத ஒரு புதிய முயற்சியாக இருந்தால், எத்தனை தடைகள் வரும் ? தனக்கு விருப்பமான துறையில் ஈடுபாடுடன் செயல்பட்டால் எதுவும் சாத்தியமாகிவிடும் என்பதை ஓவியர் திரு. ட்ராட்ஸ்கி மருது அவர்களின் நேர்காணல் தொகுப்பை வாசிக்கும் போது உணர முடிகிறது.
சமீபத்தில் நான் அவரை சென்னையில் சந்தித்து உரையாடிய போது, அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. அப்போது அவர் என்னிடம் இந்த நேர்காணல் நூலை கொடுத்தார். அதில் அவர் சொல்லியிருக்கும் செய்திகளை பார்க்கும் போது அவருக்கு ஓவியத்தின் மீதும், கலைகளின் மீதும் இருக்கும் ஆர்வம் எவ்வளவு ஆழமானது என்பதை உணர முடிகிறது. 1980-களில் அவர் கணினியை பயன்படுத்தத் தொடங்கியதும், அவர் சந்தித்த சவால்களும், ஒரு தொழில்நுட்பம் இங்கே வருவதற்கு முன்பே அதையும் மீறி அவர் சிந்தித்து செயல்பட்டிருக்கிறார் என்பதும் தெரிகிறது. தற்போதும் அவரின் தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
ஆகஸ்ட் 12, அவருடைய பிறந்த நாள். யானைகள் தினமும் அன்று தான். அவர் வரைந்து கொடுத்த அட்டைப்படத்தையும் இங்கு பகிர்ந்து மகிழ்கிறேன்.
அவருக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..!!
0 Comments