காந்தியவாதி திருமதி. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

மகாத்மா காந்தியுடன் பயணித்த மனிதர்களை சந்திக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் விருப்பம். காந்தியவாதி திருமதி. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களை சந்தித்தேன். காந்தி உடனான தன் நினைவுகளை, தன் நூறாவது வயதில் இருக்கும் அவர் எங்களோடு பகிர்ந்துகொண்டார். அவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது, என் மனம் இரண்டு நூற்றாண்டுகளுக்கு நடுவில் அலைந்து கொண்டிருந்தது. என்னுடைய "பல்லுயிர்களுக்கானது பூமி" நூலில் இருந்து "காந்தியும் சுற்றுச்சூழலும்" என்ற கட்டுரையின் சில பத்திகளை வாசித்தார். 

இப்போதும் ஏழை மக்களின் நலன் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறார். என்னுடைய முகவரியை பெற்றுக்கொண்டார். கடிதம் எழுதுவேன் என்றார். அந்த எளிமையில், அன்பில் நான் காந்தியை உணர்ந்தேன். அவர் என் கைகளை பற்றிக்கொண்டபோது நான் காந்தியை பார்த்தேன்.

திருமதி. சித்ரா பாலசுப்ரமணியன் அவர்களின் எழுத்தே இந்த நாளை எனக்கு அமைத்துக்கொடுத்தது. அவருக்கு என் நன்றிகள்.



Post a Comment

0 Comments