பழுத்துதிரும் இலைகள்

பழுத்துதிரும் இலைகளை பார்த்து 

கவலைகொள்ளும் சிறுமி,

மரங்களிடம் சொல்லிவைத்த 

சத்தியத்தை மீறுவதாய் 

எண்ணிக்கொள்கிறாள்.

இது இயற்கையின் ஒரு பகுதி 

என்றுணரா அச்சிறுமி,

அத்தேசத்தின் பனிப்பொழிவை 

தவிர்த்துவிட்டு வசந்தகாலம் 

வருமெனக் காத்திருக்கிறாள்.

மரங்கள் துளிர்க்கத்தொடங்கியதும்,

அவள் பறக்கத்தொடங்கினாள்.


Post a Comment

4 Comments

  1. அருமை. கவிதை நயத்தின் மயக்கத்தில் நாங்களும் உடன் பறக்கிறோம்

    ReplyDelete
  2. Felt the true feelings of the little girl towards nature... and here hope....

    ReplyDelete