Mar 7, 2023

கெங்குவார்பட்டி - மலையடிவாரத்தில் ஒரு மாற்றம்

வத்தலகுண்டில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் மலையேறுவதற்கு முன்பாக ஒரு காவல் தடுப்பு நிலையம் இருக்கிறது. அதன் அருகிலேயே Palani Hills Conservation Council சார்பாக ஒரு மரக்கன்றுகள் உற்பத்தி நிலையமும், தேனீ வளர்ப்பு நிலையமும் இருக்கிறது. 

ஏராளமான நாட்டு ரக மரக் கன்றுகளை இங்கே பெற முடியும். கல்லூரி, பள்ளி வளாகங்களில் மரக் கன்றுகளை நட விரும்புகிறவர்கள் இங்கு கன்றுகளை வாங்கலாம். கொடைக்கானல் சுற்றுலா சென்றுவிட்டு திரும்புகிறவர்கள் தங்களுக்கு விரும்பியதை கடைகளில் வாங்கிச் செல்வார்கள். சுற்றுலாப் பயணிகள் இங்கே மரக் கன்றுகளையும் வாங்கிவிட்டு ஊர் திரும்பலாம். 

வளர்ப்புத் தேனீக்களின் மூலம் பெறப்படும் தேனும் இங்கு கிடைக்கும்.
















4 comments:

Would you like to follow ?