தெருவில் தானியங்கள் சிதறுவதில்லை.

ஓடுகள் வேய்ந்த வீடுகளுமில்லை. 

மருந்துகள் இல்லா கழனியுமில்லை. 

வீட்டைச் சுற்றி மரங்களுமில்லை. 

பல நூறாண்டுகளாய் மனிதனோடிருந்தவை. 

வாழிடம் தொலைந்ததால் வேறிடம் சென்றவை. 

மீட்டுவர மனமிருந்தால் 

நிச்சயம் வந்துவிடும்.

வீட்டில் ஒரு கூடமைத்தால் 

நிரந்தரமாய் தங்கிவிடும். 

விட்டுப்பிரிய மனமில்லை.

சிட்டுக்குருவிகளுக்கு அழிவில்லை.

கீச்சொலிகளால் காற்றை நிறைக்கும் குருவிகளுக்கு 

எங்கேயும் எப்போதும் இடமுண்டு.