சிட்டுக்குருவி [House Sparrow]

தெருவில் தானியங்கள் சிதறுவதில்லை.

ஓடுகள் வேய்ந்த வீடுகளுமில்லை. 

மருந்துகள் இல்லா கழனியுமில்லை. 

வீட்டைச் சுற்றி மரங்களுமில்லை. 

பல நூறாண்டுகளாய் மனிதனோடிருந்தவை. 

வாழிடம் தொலைந்ததால் வேறிடம் சென்றவை. 

மீட்டுவர மனமிருந்தால் 

நிச்சயம் வந்துவிடும்.

வீட்டில் ஒரு கூடமைத்தால் 

நிரந்தரமாய் தங்கிவிடும். 

விட்டுப்பிரிய மனமில்லை.

சிட்டுக்குருவிகளுக்கு அழிவில்லை.

கீச்சொலிகளால் காற்றை நிறைக்கும் குருவிகளுக்கு 

எங்கேயும் எப்போதும் இடமுண்டு.

Post a Comment

16 Comments

 1. கீச்சொலிகள் காற்றை மட்டுமல்ல, மனதையும் நிறைக்கும்.
  சிட்டுக்குருவிகளைத் தேடி அலைகிறது மனம்.

  ReplyDelete
 2. அருமையான வரிகள்... நான் ன் வீட்டில் சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை கூட்டும் முயற்சியை 4ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கி இப்பொழுது எங்கள் தெருக்களெங்கும் அவற்றின் கீச்சள்களையும் அவற்றின் துருதுரு இயக்கத்தையும் காண முடியும். என்னை போன்றே பக்கத்து வீட்டாரும் அதனை பேணி காப்பது ஆனந்ததின் உச்சம். எங்கள் வீட்டில் குறைந்தது 10 குருவிகள் தஞ்சமடைந்து எங்கள் வீட்டின் அழகையே மாற்றிவிட்டது. மத்திய நேரத்தில் அவற்றின் கீச்சல்களே நாங்கள் கேட்கும் இனிய இசை அது எத்தனை இளைய‌ராஜக்கள் வந்தாலும் ஈடு செய்ய முடியாது 😊

  ReplyDelete
 3. Excellent lines.. Sparrow was my first bird which I had recognised right from my childhood. In 2015, Four individuals of house sparrows came to my home and It was one of the greatest of times in my life.. seriously missing them these days. My birthday falls on March 25 but I always eagerly wait for March 20. Because it’s a world sparrow day.. Thanks for sharing your beautiful lines which brings back my memories with sparrows 😊

  ReplyDelete
 4. Beautiful 😍 amazing lines ❤️👌🏻👏🏻 Waiting for the book 🙌🏼

  ReplyDelete
 5. மன்னித்து விடு மறுபடியும் வா,மண்பானையை தொங்க விடுகிறேன் ,மாடியில் தண்ணீர் வைக்கிறேன், எங்கள் வாசலில் வந்து மணலில் விளையாடு.

  ReplyDelete
 6. அர்விந்த்December 17, 2021 at 8:28 AM

  உண்மை!

  ReplyDelete
 7. மிகச் சிறப்பு,
  சின்னஞ்சிறு சிட்டுக்குருவி யின்
  கீச்சொலியில் மனவெளி எங்கும்
  பாய்ந்து சென்ற பேரின்பங்கள்
  தென்றலாய் நினைகளை
  வருடிச் செல்கிறது.

  - ஆற்காடு ராஜா முகம்மது.

  ReplyDelete