புதுக்கவிதைகள் எழுதுமொருவன்
வருடாவருடம் வலசை வரும்
செங்கால் நாரைகளுக்காக
காத்திருக்கிறான்.
மிகவும் அருகிப்போன இப்பறவைகளை
காணக்கிடைக்காது தேடிக்களைத்த பொழுது
புறநானூற்றுப் புலவரின் மேல்
கொஞ்சம் பொறாமை
வரத்தான் செய்கிறது.
மேலும் சில பறவைகள் - கவிதைகள் :
Nice....
ReplyDeleteThanks Udhay 😊
Delete(புதுப்)பாடல் பெற்ற பறவை!
ReplyDeleteநன்றி அரவிந்த் 😊
DeleteAwesome it’s like a poems I studied at school 👌🏻😍
ReplyDeleteசத்திமுற்றப் புலவர் (புறநானூறு) பாடிய செங்கால் நாரை..
Deleteநாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வார்ச் செங்கால் நாராய்
நீயுநின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
வடதிசைக்கேகுவீராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
"எங்கோன் மாறன்வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே....
நாராய் நாராய் ❤️❤️
ReplyDeleteவாராய் வாராய் 🍁🍁
Delete