Jul 14, 2021

யானை

குழந்தை கொடுத்த

ஒற்றை பழத்தை

முகம் சுழிக்காமல்
 
வாங்கி உன்னும்
 
யானையின் மனது

அதனினும் பெரிது. 

Jul 11, 2021

யானை

யானை பற்றிய 

கவிதை ஒன்றை மெருகூட்ட

வார்த்தைகளை 

தேடி அலைகிறேன். 

என்னால் யானையை 

நெருங்க முடியவில்லை.