யாருக்கானது பூமி? - விமர்சனம் - 1

 

நன்றி காந்தி சங்கர்...!!!

----‐--------------------------------------------


நூல் : யாருக்கானது பூமி? 

ஆசிரியர்: பா. சதீஸ் முத்து கோபால் Satheesh Muthu Gopal


சிறந்த சுற்றுச்சூழல் விருதினை 2014-15ம் ஆண்டிற்கான விருதை இந்த நூல் பெற்றிருக்கிறது. 


நூல் ஆசிரியர் ஒரு கானகம்/காட்டுயிர்/ பறவை ஆர்வலர். இவர் தனது அவதானித்தலையும் காட்டு பயணங்களையும் இந்த நூலில் கூறியுள்ளார்.


மொத்தம் 12 கட்டுரைகள் உள்ள இந்த நூலில், முதலில் வருவது....


காட்டு தீயும் கடிவாளமும் - காட்டு தீ ஏற்படும் விதத்தையும் அதை எவ்வாறு தடுப்பது என்ற விழிப்புணர்வு நிகழ்வுக்காக ஒரு மலை கிராமத்துக்கு சென்ற தனது அனுபவத்தை விவரிக்கிறார். 


காடு சூழ் காவிரி - காவிரி நதியை சுற்றியுள்ள காட்டினை பற்றியும் அங்குள்ள விலங்குகள் பறவைகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.


பழனியும் பறவைகளும் - அவரது சொந்த ஊரான பழனியில் உள்ள பறவைகளை அதன் அழகிய அனுபவங்களையும் நம்முடன் அசைபோடுகிறார்.


பழனி மலை தொடர்ச்சி - மேற்கு தொடர்ச்சி மலையில் பழனி மற்றும் கொடைக்கானல் உள்ள விலங்குகளையும் பறவைகளையும் குறிப்பிடுகிறார். கூடவே, அந்த பறவைகளின் வாழும் இடங்களையும் வாழும் நிலையையும் எடுத்து கூறுகிறார். சோலை காடுகளில் யூகலிப்டஸ் மரங்கள் எவ்வாறு கொண்டுவரப்பட்டு, இந்த மரங்கள் எவ்வாறு காட்டினை அழிகிறது என்றும் விவரிக்கிறார். பைன் மரங்களும் அவற்றை பார்வையிடும் பொது மக்களையும் கேள்வி கேட்கிறார். இங்கே ஏற்படும் நரக வளரச்சி எவ்வாறு காட்டுயிர்களுக்கு தீங்காகிறது என்பதும் தெரிகிறது. 


சென்னைக்கும் சிறகு உண்டு - க்கு வைக்கும் போதே, அது ஆச்சரியமும் அழகும் வாய்ந்ததாக உள்ளது. கூவம், அடையாறு ஆறுகளை நாசமாக்கி, சோழிங்கநல்லூரின் பறவை அவதானித்தலை அதிசயக்கிறார். இயற்கை இன்னும் இங்கே மிச்சம் இருக்கு.... அழிக்கவா இல்லை காக்கவா? கேள்வி நம் கைகளில்.


முடிந்தவரை காட்டில் செல்லும் சுற்றுலா பயணிகளை திட்டுகிறார். அவர்களின் பொறுப்பின்மையை  கடிந்துகொள்கிறார். அரசும் பொதுமக்களும் நீரினை தரும் காட்டினை காக்க முயலவில்லை. வனங்களில் எங்கெங்கு காணினும் நெகிழி. இதை தடுக்க எவரும் முனைவதில்லை. வெகு சில மக்களே வனத்தின் மேன்மையை உணர்ந்து கொள்கின்றனர். அழிந்தவைகளை மீட்டெடுக்கவும், அழிவதை தவிர்க்கவும் இந்த சிலர் போதுமானதாக இல்லை.


இத்துடன் தனது சுவிட்சர்லாந்து பறவை அவதானித்தலையும், அதே பறவைகள் சில இந்தியாவிற்கு வலசை வந்து இங்கு படும் அவஸ்தையையும் ஒப்பிடுகிறார்.


புத்தகம் முழுதும் இவரின் பயணக்கட்டுரையில் பறவைகள் விலங்குகளின் தமிழ் மற்றும் ஆங்கில பெயர்களை குறிப்பிடுகிறார். ஆங்காங்கே தமிழ் இலக்கிய மேற்கோள்களும் வருகின்றன.

அழகிய காட்டுயிர்களின் புகைப்படங்கள் கருப்பு வெள்ளையில் உள்ளது.


யாருக்கானது பூமி? - இந்த புத்தகத்தில் இதற்க்கான நேர் பதில் இல்லை.


பல்லுயிர் ஓம்பி அனைத்து உயிரனங்களுடன் சேர்ந்து வாழாமல், அனைத்திற்கும் மேலாக இருந்து ஆட்சி செய்ய துடிக்கும் மனித இனத்துக்கானது இல்லை என்பது பட்டவர்த்தமாக தெரிகிறது.

Post a Comment

0 Comments