Jul 31, 2020

காட்டை தொலைத்த கிளிகள் [Spix's Macaw]

தற்போது காடுகளில்  முற்றிலும் அழிந்து போன பறவையினம் Spix's Macaw.  ஒரு சில இடங்களில் இந்த கிளி இனம் பாதுகாக்கப்பட்டாலும், இவை முற்றிலும் காடுகளில் இருந்து அழிந்து போனதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கபப்டுகின்றன. 

Taxidermy Specimen of Spix's Macaw at Berlin Natural History Museum


அமேசான் காடுகளில் இந்த பறவை வாழ்ந்த சில குறிப்பிட்ட காடுகள்  அழிக்கப்பட்டது, இந்த பறவையினம் வாழ்வதற்கு தேவையான இயக்கையான வாழிடம் இல்லாமல் போனது, வளர்ப்புக்காக அதிக அளவில் பிடிக்கப்பட்டது, காடுகளை அழித்து அணைகள் கட்டியது, நீர் மின் நிலையங்கள் உருவாக்கப்பட்டது, கால்நடை வளர்ப்புக்காக காடுகளை சீர்செய்தது போன்ற காரணங்களால் இன்று காடுகளில் இருந்து முற்றிலும் அழிந்து போய்விட்டது இந்த பறவையினம்.

பெரும் திட்டங்கள் தொடங்கும் போது அந்த பகுதியில் வாழும் உயிரினங்கள் என்ன, உயிர்ச் சூழல் என்ன என்பதை ஆராய்ந்து அந்த திட்டங்களுக்கான அனுமதியை கொடுக்கவேண்டும் என்பதே பிரேசில் நமக்கு சொல்லும் பாடம்.


IUCN Status: Extinct in the Wild



Jul 26, 2020

உலகின் மிகப்பெரிய கிளி இதுதான். ஆனால் ?? [Hyacinth Macaw]

உலகில் வாழும் கிளி இனங்களில் மிகப்பெரியது Hyacinth Macaw. தென் அமெரிக்காவின் அமேசான் காடுகளில் காணப்படும் இந்த கிளிகள் தற்போது அழிவை சந்தித்து வருகின்றன. அதற்கு முக்கிய காரணம் அதன் வாழிடம் அழிக்கப்படுவதே. இதன் வாழிடம் அழிக்கப்படுவதற்கு காரணம் ஜெர்மனியின் உணவுப் பழக்கம் என்பது தான் நாம் கவனிக்க வேண்டியது. ஜெர்மனியர்களின் முக்கிய உணவான பன்றிக்கறி பிரேசிலில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் டன் கணக்கில் இறக்குமதி செய்யப்படுகிறது. ஜெர்மனியின் காலச் சூழல் அங்கே பன்றிகளை வளர்க்க போதுமானதாக இல்லை. எனவே அவை பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. 



Taxidermy Specimen of Hyacinth macaw at Berlin Natural History Museum

அமேசான் மழைக்காடுகளில் உள்ள வளமான மண் பன்றிகளை வளர்க்கவும், அவற்றின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யவும் உதவியாக இருப்பதால் மழைக்காடுகள் பன்றிகள் வளர்ப்புக்காக அழிக்கப்படுகின்றன. 

Taxidermy Specimen of Hyacinth macaw at Berlin Natural History Museum

சுமார் 2 கிலோ எடையுடன் 90 ஆண்டுகள் உயிர் வாழக்கூடிய இந்த பறவையினம் தனது வாழிடத்தை இழந்து வருகிறது. ஜெர்மானியர்கள் தங்கள் உணவுப் பழக்கத்தை கொஞ்சம் மாற்றிக்கொண்டால் பல்லாயிரம் ஆண்டுகளாக பரிணமித்த இந்த பறவையினம் தப்பிப்பிழைக்கும்.  

Jul 25, 2020

வரிக்குதிரைகளுக்கு வரிகள் வந்தது எப்படி ?


Plains Zebra

வரிக்குதிரைகளுக்கு ஏன் வரிகள் வந்தன ? ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து ஏன் இவ்வளவு உயரமாக இருக்கிறது ? யானை ஏன் பெரிதாக இருக்கிறது ? இப்படி குழந்தைகள் இயற்கை சார்ந்து கேட்கும் ஆயிரமாயிரம் கேள்விகளுக்கும் பெரும்பாலான பதில் பரிணாம வளர்ச்சியை சார்ந்தே இருக்கிறது. அவ்வாறு பரிணாம வளர்ச்சி மூலம் உயிரினங்கள் தங்களை தக்கவைத்துக்கொள்ள ஏற்படுத்திய மிகப்பெரிய ஆயுதம் உருமறைத் தோற்றம் [Camouflage]. இந்த படத்தில் இருக்கும் பக்கி [Jungle Nightjar] என்ற பறவை எவ்வாறு உருமறைத் தோற்றம் கொண்டுள்ளது என்று பாருங்கள்.
Jungle Nightjar : Thanks to Magesh Ramasamy for the Photograph


வரிக்குதிரைகளுக்கு வரிகள் இருக்க காரணம் வேட்டை விலங்குகளான சிங்கம், சிவிங்கப்புலி [Cheetah] போன்றவற்றிடம் இருந்து தப்பிக்கவே என்று நம்பப்பட்டது. அதன் உடலில் இருக்கும் வரிகள் வரிக்குதிரைகள் கூட்டமாக செல்லும் போது வேட்டை விலங்குகளை குழப்புமென்றும் அதனால் வரிக்குதிரைகள் தப்பிவிடும் என்றும் சொல்லப்பட்டது.


Gravy's Zebra


ஆனால் வரிக்குதிரைகளின் உடலில் வரிகள் இருக்க காரணம் சிங்கம் அல்ல. ஒரு வகையான ஈ [Tsetse Fly] என்றால் நம்ப முடிகிறதா? ஆப்ரிக்காவில் இருக்கும் இந்த ஈக்களின் கண்கள் [Compound Eyes] வரிகள் கொண்ட எந்த பொருளின் மீதும் சென்று அமர ஏற்றதாக இல்லை. அதிக நோய்த்தொற்றை ஏற்படுத்தி வரிக்குதிரைகளுக்கு சவாலாக இருத்திருக்கவேண்டிய  இந்த ஈக்களிடம் இருந்து தப்பிக்கவே பரிணாம வளர்ச்சி இப்படி ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறது. 



Taxidermy Specimen of Plains Zebra at Berlin Natural History Museum




Jul 23, 2020

Black and Orange Flycatcher - Pencil Sketch




Jul 15, 2020

Anaimalai Spiny Lizard (Salea anamallayana)

உலகில் வெறும் எங்கும் காணப்படாத மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே வாழும் உயிரினம் "Anaimalai Spiny Lizard (Salea anamallayana)". ஓரிட வாழ்வியான (Endemic to Western Ghats) இந்த உயிரினத்தை 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பழனி மலைத் தொடரில் உள்ள பாம்பே சோலையில் பார்த்தேன். சோலைக் காடுகளில் காணப்படும் உயிரினம் இது.





இந்த உயிரினம் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் (ஆனைமலை, பழனி மலைத் தொடர், மேகமலை) மட்டுமே காணப்படுகிறது. 



Jul 5, 2020

Quagga - தென் ஆப்ரிக்காவின் இழப்பு [South Africa]


வரிக்குதிரைகளின் நெருங்கிய தொடர்புடைய குதிரை பேரினத்தில் வாழ்ந்த உயிரினம் "Quagga". தென் ஆப்ரிக்காவில் வாழ்ந்த இந்த உயிரினம் 19-ஆம் நூற்றாண்டில் முற்றிலும் அழிந்துவிட்டது. 


Taxidermy Specimen of Quagga at Berlin Natural History Museum


அதிகமான வேட்டையாலும் அவற்றின் வாழிடம் சிதைக்கப்பட்டதாலும் "Quagga" என்ற உயிரினம் முற்றிலும் அற்றுப்போனது. 1883-ஆம் ஆண்டு இவ்வுலகில் வாழ்ந்த கடைசி "Quagga" ஆம்ஸ்டர்டாம் மிருகக் காட்சி சாலையில் இறந்து போனது.



மேலும் :