காடோடி : திரு.நக்கீரன்


இன்று உலக புத்தக தினம். வாசகர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

சமீபத்தில் நான் வாசித்த ஒரு நூலை இன்று அறிமுகப்படுத்துவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். திரு.நக்கீரன் அவர்கள் எழுதிய "காடோடி" என்ற நூலை வாசித்தேன்.

தமிழில் எத்தனையோ நாவல்கள் எழுதப்பட்ட போதிலும், காட்டை மையப்படுத்தி எழுதப்பட்ட நாவல்கள் மிகக் குறைவு என்றே நினைக்கிறேன். அதிலும் காட்டுயிரை பற்றிய புரிதலோடு, காட்டின் அழிவுகள் ஏற்படுத்தும் விளைவுகளை கருத்தில் கொண்டு இதுவரை நாவல் எழுதப்பட்டுள்ளதா என்பது சந்தேகமே. காடோடி ஒரு தொடக்கம் என்றே நினைக்கிறேன். காட்டுயிர் பற்றிய கட்டுரை நூல்களே எழுதப்பட்டு வந்த நிலையில் ஒரு கதைக்குள்ளும் காட்டுயிர் பேனலின் அவசியத்தை உணர்த்த முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார், திரு.நக்கீரன் அவர்கள்.



ஒரு பறவை பறக்கிறது என்ற காலம் கடந்து ஒரு இருவாசி பறக்கிறது என்பதை நாவலில் வாசிக்கும் போது, தமிழ் எழுத்துலகில் காட்டுயிர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை துளிர்க்கிறது. இந்த நாவலின் மையப்பொருளே காடுகள் அழிவது பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் தான். தொல்குடி மனிதர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தார்கள் என்பதும், இன்று மனிதர்கள் தங்கள் பேராசைக்காக காட்டை எப்படி கொள்ளை அடிக்கிறார்கள் என்பதையும் தன் அனுபவத்தின் மூலமாக நாவலில் செதுக்கியிருக்கிறார்.

போர்னியோ காடுகள் அழிக்கப்படுவது குறித்து, அதிக விழிப்புணர்வு நம் சமூகத்தில் இல்லை. அந்த வகையில் இந்த நூல், நாம் அறிந்திராத ஒரு நிலப்பகுதியை அப்படியே கண்முன் நிறுத்துகிறது.

மரங்களை பெரிய அளவில் வணிகம் செய்யும் மேற்கத்திய நாடுகளின் பார்வையில் மரம் என்றால் என்ன அர்த்தம் என்று தொடங்குகிறது இந்த நூல் :

மரம் என்றால் அது இலைகள் அல்ல. பூக்கள் அல்ல. காய்கள் அல்ல. கனிகளும் அல்ல. ஏன். அது மரமே அல்ல. மரம் என்றால் அது வெறும் டாலர், டாலர், டாலர் மட்டுமே.

காடழிப்பு மெல்ல மெல்ல காட்டில் எப்படியான விளைவுகளை ஏற்படுத்துகிறது, ஒவ்வொரு காட்டுயிரும் எப்படியான சிக்கலை சந்திக்க நேரிடும் என காட்டுயிர் மீதான அக்கறையோடும் அறிவியல் புரிதலோடும் எழுதிருக்கிறார். காட்டை சுற்றுலாதலமாகவும், மது அருந்தும் இடமாகவும் மட்டுமே பார்க்கும் இன்றைய தலைமுறைக்கு, காட்டை பற்றிய புரிதலை இந்த நூல் உருவாகும். இந்த நாவலில் வரும் பிலியவ் என்ற தொல்குடி மனிதர் தான் நாவலின் நாயகன். வாசித்துப் பாருங்கள். பனுவலில் இந்த நூலை பெறலாம்.

https://crownest.in/kaadodi-novel-by-nakkheeran/




Post a Comment

3 Comments

  1. சூழலியல் சார்ந்த நாவல் தமிழில் இதுபுதுமை....படிக்கும்போது நாமும் அக்காடுகளில் தடமாடுவதுபோன்றே இருந்த்து என்னையறியாமல் அழுதேன்... சிரித்தேன் ...

    ReplyDelete
  2. சூழலியல் சார்ந்த நாவல் தமிழில் இதுபுதுமை....படிக்கும்போது நாமும் அக்காடுகளில் தடமாடுவதுபோன்றே இருந்த்து என்னையறியாமல் அழுதேன்... சிரித்தேன் ...

    ReplyDelete