கூவம் என்ற அழகிய நதி

திருவள்ளூர் மாவட்டத்தில் உற்பத்தியாகி வங்கக் கடலில் கலக்கும் எழுபது கி.மீ நீளம் கொண்ட அழகிய நதி கூவம் என்று அழைக்கப்படுகிறது. கூவம் இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது, அழகை இழந்து, அழுக்கோடு மட்டும். ஒரு காலத்தில் இந்த நதியில் ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்தன. இந்த நதியில் படகுப் போக்குவரத்து நிகழ்ந்தது. நதியை ஒட்டி சிவாலயங்கள் இருந்தன.



சிறிய நதி என்றாலும் மிகவும் அழகான நதியாகவே இருந்திருக்கிறது கூவம். இன்றைய கூவம் மீன்களை இழந்திருக்கிறது, பறவைகளை இழந்திருக்கிறது, அதன் கரையோர பசுமையை இழந்திருக்கிறது, மனிதர்களின் கழிவுகளை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு தன்னுடைய வாழ்வை முடித்துக்கொண்டுவிட்டது. கூவம் தன்னுடைய ஜீவனை இழந்துவிட்ட பின்னரும் நாம், அது வாழ்ந்துவிட்டு போன பாதையையும், நாசம் செய்து கொண்டே இருக்கிறோம்.



கூவத்தை சுத்தம் செய்வதாக சொல்லிவிட்டு, பின் அதை மறந்துபோன தலைவர்களை நாமும் மறந்துபோவது நமக்கு புதிதல்ல. ஒரு நதி என்பது எத்தனை உயிர்களின் வாழ்வாதாரம்? இன்று நம்மிடம் இருக்கும் தொழில்நுட்பத்தை கொண்டு எத்தனை நதிகளை நம்மால் உருவாக்க முடியும்? நாம் இழந்துவிட்ட ஒரு நதியின் மீது தன் நாம் வாகனங்களை ஒட்டி செல்கிறோம். நம்மில் எத்தனை பேருக்கு இந்த நதியை உயிர்ப்பிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்...?




2004 ஆம் ஆண்டு, சென்னையை சுனாமி தாக்கியபோது கூவம் ஒரு வடிகாலாக செயல்பட்டு மிகப்பெரிய சேதத்தை தவிர்த்தது. இன்றைய கூவம் இப்படி மாறிப்போனதற்கு சென்ற தலைமுறை மக்களே காரணமாக இருக்கலாம். சென்னை வளர்ச்சியடைய தொடங்கியிருக்கும் போதே சரி செய்யப்பட்டிருக்க வேண்டும். போனது போகட்டும். இன்னும் 20 ஆண்டுகளில், அதே பாதையில் ஒரு அழகிய நதி ஓடுமாயின் அதற்கு நாமே காரணமாக இருந்தால் என்ன?



Post a Comment

5 Comments

  1. எல்லாருக்கும் இதே ஆசைதான் மாற்றம் நடக்கட்டும் நண்பரே.
    http://tamilkangal.blogspot.in/

    ReplyDelete
  2. இதை எழுதி 12 வருடங்கள் ஆகிறது. கூவம் இறந்துவிட்டதாக தற்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

    ReplyDelete
    Replies
    1. 12 வருடங்களில் எந்த மாற்றமும் இல்லை 😔.

      Delete