திருப்பூர் சாயப்பட்டறைகள்


திருப்பூரில் உள்ள 729 சாயப்பட்டறைகளை மூட வேண்டும் என்று உயர் நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தமிழக மக்களால் கொண்டாடப்பட வேண்டிய தீர்ப்பு. சுமார் 20 ஆண்டுகளாக நொய்யல் ஆற்றை நாசம் செய்து கொண்டிருந்த சாய கழிவுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக இந்த தீர்ப்பு வந்துள்ளது வரவேற்கத்தக்கது.

கழிவு நீர் சுத்திகரிப்பு முழுமையாக செயலபடுத்தப்படாத சாயப்பட்டறைகளை மூட வேண்டும் என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தீர்ப்பு வழங்கப்பட்ட போதும், அதற்கு பிறகு மத்திய மாநில அரசுகள் சுத்திகரிப்புக்காக சுமார் 320 கோடி ரூபாய் மானியம் வழங்கியும், முறையாக எதுவும் நடமுறைபடுத்தாமல் விட்டதால் இன்று சாயப்பட்டறைகளை மூட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

சாயப்பட்டறைகள் மூடப்பட்டதால் பலர் வேலை இழக்க நேரிட்டதை மறுப்பதற்க்கில்லை. அதே நேரம் நொய்யல் ஆற்றை நம்பியிருக்கும் 16 ,000 ஏக்கர் விவசாய நிலம் புத்துயிர் பெறுவதோடு, ஆயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்வும் மேன்படும்.

குடிதண்ணீர் பிரச்னை தீரும். கால்நடைகள் வளம் பேரும். சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படும்.

Post a Comment

0 Comments