என்டோசல்பான்

என்டோசல்பான் பூச்சி கொல்லி மருந்து ஏற்படுத்தும் தாக்கத்தை இன்னும் இந்த தேசம் உணராமல் இருப்பது, இந்த தேசத்திற்கு நல்லது அல்ல. இன்னமும் இதற்கு தடை விதிக்காமல் இருப்பது, எதிர்கால சந்ததியனரின் மீது இந்த அரசாங்கம் எப்படி அக்கறையின்றி இருக்கிறது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம்.


கேரளாவில் ஏற்கனவே மிகப்பெரிய தாக்கத்தையும் பலருக்கு பிறவி ஊனத்தையும் ஏற்படுத்திய பிறகும், மக்கள் இதை பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. காற்று, நீர் மற்றும் நம் தோலில் உள்ள துளைகள் மூலமாக நேரடியாகவே நம் உடலுக்குள் சென்று மிகப்பெரிய உடல் நலக் கேடுகளை இது விளைவிக்கிறது. மேலும் இவை தொடர்ந்து நம் உடலில் தங்கி விடுவதால் நீண்ட கால பதிப்பையும் இது ஏற்படுத்துகிறது.

இந்த பூச்சிகொல்லி மருந்துகள் நீரில் விளை நிலங்களில் தெளிக்கப்படுவதால், பறவைகள் மிக அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. இன்று பல்வேறு பறவை இனங்கள் அழிந்து வருவதற்கு இது போன்ற பூச்சிக்கொல்லி மருந்துகளே  காரணம். மேலும் இவை ஆறுகளிலும், ஏரிகளிலும் கலந்து, மீன்கள் அதிக அளவில் இறக்க நேரிடுகிறது.

உலகின் பல்வேறு நாடுகள் இதை தடை செய்த பிறகும், நாம் இன்னமும் இதை வேளாண்மைக்கு பயன்படுத்தி வருவது வெட்கக்கேடானது .

மேலும் படிக்க: பசுமை விகடன் (இதழ்: 25.02.2011)

Post a Comment

1 Comments

  1. உலகில் பல்வேறு நாடுகள் இந்த பூச்சி கொல்லியை தட்பை செய்துவிட்ட போதிலும் இந்தியா, சீனா, உகாண்டா மட்டும் ஆதரவுக்கரம் காட்டி வருகின்றன காரணம் ஆண்டொன்றுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம்... உலக கருத்தரங்கில் இதை தடை செய்ய கோரி தீர்மானம் நிறைவேற்றுகையில் இந்த மூன்று நாடுகளும் ஐந்து முதல் பத்து வருட கால நீட்டிப்பு கேட்டு வருகின்றன... சமீபத்தில் இந்தியா மட்டும் தனது நிபுணர் குழுவை கூட்டி இதற்கான மாற்று பூச்சிகொல்லி காணும் திட்டத்தில் முதன் முறையாக அடிஎடுத்துள்ளது ... இருப்பினும் எவ்வளவு நாட்கள் நீடிக்குமென்பது தெரியவில்லை.... Ram Sudarsan.M

    ReplyDelete