பழனி மலை தொடர்ச்சி

தமிழ்நாட்டிற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுமார் 2000 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது பழனி மலைத் தொடர்ச்சி. நிறைய மலைக் கிராமங்களையும் கொடைக்கானல் நகரையும் உள்ளடக்கியது இந்த மலைத் தொடர்ச்சி. இதில் சுமார் 700 சதுர கி.மீ வனப்பரப்பு உள்ளது. இது தவிர காப்பித் தோட்டங்களும் தேயிலைத் தோட்டங்களும் உள்ளது. இந்த பழனி மலைத் தொடர்ச்சியில் உள்ள வனப்பரப்பு பாதுகாக்கப்பட்ட வனமாகவோ அல்லது வனக் காப்பகமாகவோ தரம் உயர்த்தப்பட வேண்டியுள்ளது.

ஏராளமான உயிரினங்கள் இந்த மலைப்பகுதியில் உயிர் வாழ்கின்றன. குறிப்பாக மலை அணில்(Grizzled squirrel), வரையாடு (Nilgiri Thar), கேளையாடு (Muntjac), யானை,புள்ளிமான் (Chital), சிறுத்தைப் (Leopard), கரடி மற்றும் ஒரு சில இடங்களில் அரிதாக புலியும் காணப்படுவதாக சொல்லப்படுகிறது. பறவைகளிலும் பல விதமான பறவைகள் இந்த மலைப் பகுதிகளில் வாழ்கின்றன. குறிப்பாக இருவாச்சி(Hornbill) என்ற அரிதான பறவைகள் இங்கு உள்ளன.


இந்த மலைத் தொடர்ச்சியின் பல்வேறு இடங்களில் செழுமையான நீர் நிலைகளும் உள்ளன. இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய அருவியும் தமிழ்நாட்டின் அதிக உயரமான அருவியுமான தாலையார் அருவி இங்கு உள்ளது. அதிகமாகும் போக்குவரத்தாலும், மரங்கள் வெட்டப்படுவதாலும், சுற்றுலாப் பயணிகள் கொண்டுவந்து போடும் பிளாஸ்டிக் கழிவுகளாலும் இந்த மலைப் பகுதி சீர்கேடடைந்து வருகிறது. கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களுக்கு வரும் பயணிகள் பிளாஸ்டிக் கழிவுகளை தவிர்த்தால் பெருமளவு மாசுபடுவதைத் தவிர்க்க முடியும்.


Palani Hills Conservation Council என்ற அமைப்பு பழனி மலைப் பகுதியில் வாழும் மலைவாழ் மக்களுக்கு தேனீ வளர்ப்பு முறை பற்றி சொல்லித் தருவதோடு அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுகிறது. இந்த மலைப் பகுதியில் மிச்சமிருக்கும் வனப்பகுதிகளை பாதுகாக்க வேண்டுமெனில் நிறைய முயற்சிகளை செய்தாக வேண்டும். இணையத்தளம்: www.palnihills.org/


Post a Comment

0 Comments