பாண்டா கரடிகள் : சீனாவின் சூப்பர் ஸ்டார்

சீனாவில் மட்டுமே காணப்படும் மிகவும் அரிய வகை விலங்கு பாண்டா கரடிகள். அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்ட்ரியா, தாய்லாந்து, மெக்ஸிகோ மற்றும் பல நாடுகளின் மிருக காட்சிசாலைகளிலும் இவை பாதுகாக்கப்பட்டு வருகிறது. சீனாவின் சிச்சுவான், ஷான்சி மற்றும் கன்ஷி வனப்பகுதிகளில் இவை வாழ்கின்றன. உலகின் தற்போது 2000க்கும் குறைவான பாண்டா கரடிகளே உள்ளன. பெரும்பாலும் மூங்கிலை மட்டுமே உண்டு வாழும் இவை தற்போது தட்டுப்பாடான உணவின் காரணமாக நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.

Giant Panda - Singapore [River Wonders] - Photographer : Satheesh Muthu Gopal


இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஒன்று அல்லது இரண்டு குட்டிகள் ஈனும் இந்த பாண்டா கரடிகள் பிறக்கும் போது 15 செ.மீ நீளமும் 200 கிராம் எடை கொண்டதாக மட்டுமே இருக்கும். சுமார் 15 முதல் 20 வருடங்கள் வாழக்கூடியது. பெரும்பாலும் ஒரு குட்டியை மட்டுமே தாயால் பராமரிக்க முடியும். எனவே மிருக காட்சிசாலைகளில் பிறக்கும் குட்டிகள் மனிதர்களால் பராமரிக்கப்பட்டாலும் இவற்றை எளிதில் பாதுகாக்கமுடியாமல் போனது. எனவே அதன் உணவு முறை மற்றும் மரபணு குறித்த ஆராய்ச்சியை பின்பற்றி தற்போது உணவு கொடுக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. பாண்டா கரடிகள் அரிய வகை உயிரினம் மட்டுமின்றி மிகவும் விலை உயர்ந்த உயிரினமாகவும் பார்க்கப்படுகிறது. அதற்குக் காரணம், இவற்றைப் பராமரிப்பதற்கு ஆகும் அதிகப்படியான செலவுகளே.

சீனாவிடம் இருந்து பாண்டா கரடிகளை வாங்குவதற்காக அமெரிக்கா நிறைய பணம் செலவு செய்கிறது. வருடத்திற்கு சராசரியாக மூன்று மில்லயன் டாலர்களை அமெரிக்க செலவிடுகிறது. ஒரு பாண்டா குட்டியை வாங்குவதற்கு 6,00,000 டாலர்களை அமெரிக்க சீனாவிற்குக் கொடுக்கிறது. இந்த பணம் வனப்பகுதிகளில் வாழும் பாண்டா கரடிகளின் வாழ்கை மேம்பாட்டிற்காக செலவு செய்யப்படுகிறது. அழிந்து வரும் மூங்கில் காடுகள் இவற்றிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. மிருகக்காட்சி சாலைகளில் பராமரிக்கப்படும் பாண்டா கரடிகளின் எண்ணிக்கையில் தற்போது முன்னேற்றம் காணப்பட்டாலும், வனப்பகுதியில் வாழும் பாண்டா கரடிகளின் எண்ணிக்கையில் முன்னேற்றம் ஏற்ப்படவில்லை. United Nations Convention on International Trade in Endangered Species(CITES) மற்றும் U.S Endangered Species Act தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகிறது.

Giant Panda - Singapore [River Wonders] - Photographer : Satheesh Muthu Gopal

 
இன்று உலகம் முழுவதும் பாண்டா கரடிகளுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உருவாகி விட்டாலும் இவற்றை முறையாக பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சீனாவின் கையில் மட்டுமே உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் சீனாவின் வனப்பகுதிகள் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டன. வனப்பரப்பை அதிகப்படுத்தி நிறைய மூங்கில் காடுகளை உற்பத்தி செய்தாகவேண்டியுள்ளது. முதல் முறையாக 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவில் செயற்கை கருவூட்டல் முறையில் பாண்டா கரடி பிறந்தது (Tai Shan). பாண்டா கரடிகளை வைத்து சீனா பணம் பண்ணும் வித்தை கற்றது பாண்டவிற்குத் தெரியாது போனாலும், அவற்றை அழிவில் இருந்து பாதுகாக்க சீனா முயற்சி எடுத்தால் மகிழ்ச்சியே.


Post a Comment

0 Comments