மகாத்மா காந்தி கவிதை


காவிகள் செய்யும்
விளம்பர அரசியலில்
காந்தியம் தேடலாமோ?

காந்தியம் தேடுகிற
விழிகளில் யாவும்
கானல் நீர் தானோ?

குற்றங்கள் செய்வதை
மற்றவர் நோக்கினும்
பெருமை கொள்வதெனோ?

குற்ற உணர்ச்சிகள்
அற்று வாழ்வதில்
அக்கறையில்லை ஏனோ?

கண்ணியம் தவறா
அரசியல்வாதிகள் இன்னும்
எத்தனை பேரோ?

பத்து விரலுக்குள்
எண்ணி முடிப்பதே
பாரதம் செய்த கேடோ?

சாதிக்கொரு கட்சியும்
சந்தர்ப்ப அரசியலும்
சாக்கடை நீர் தானோ?

உத்தமர் காந்தியின்
சத்திய சோதனைகள்
பரணில் ஏறத்தானோ?


உங்கள் கருத்துக்களை பின்னூட்டம் செய்யுங்கள்.

Post a Comment

2 Comments