வெண்முதுகுப் பாறு [White rumped Vulture]

வேங்கைப்புலிகள் வேட்டையடி 

கழுதைப்புலிகள் தின்றது போக,

எலும்பும் சதையும்  

யாவும் உண்ணும், 

பாறுக்கழுகுகள் 

பசிதீர்த்த காட்டில், 

நலமான சூழலின்  

நற்சான்றாய் கிடந்தன,

கடமான் கொம்புகளும் 

காட்டுமாடு குளம்புகளும்.


பாறு கழுகுகள் (பிணந்தின்னி கழுகுகள் ) பற்றி அனைவரும் அறிந்து கொள்வது அவசியம். வீட்டுக்குள் ஒரு சுண்டெலி செத்துவிட்டால் அதன் வாடை நம்மால் தாங்கமுடியாது. அதை அப்புறப்படுத்தவே முயல்வோம். அப்படியானால் காட்டில் ஒரு யானை இறந்துவிட்டால் அந்தப் பணியை யார் செய்வார் ? டைக்லோபினாக் (Diclofenac) மருந்து செலுத்தப்பட்ட கால்நடைகளை, அவை இறந்த பிறகு உண்ணும் இந்த கழுகுகள் சிறுநீரக பாதிப்பால் உடனடி மரணத்தை எட்டுவதால் இதன் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இன்று பாறு கழுகுகள் மிகவும் அருகிவிட்டது. 

இதனைக் காக்க அருளகம் அமைப்பு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 




Post a Comment

4 Comments