Jul 15, 2022

அந்தரப்பூ : திரு.கல்யாண்ஜி

வண்ணதாசன் அவர்கள் எழுதிய அந்தரப்பூ வாசித்தேன். இந்த நூலின் தலைப்பே கவித்துவமானது. நூலின் தலைப்பு ஒரு கவிதையில் இருந்து உதிர்ந்துள்ளது.

மரத்தில் கிளையில்

மஞ்சரியில் பார்த்தாயிற்று

கீழ்த் தூரில். மண்ணில்

கிடப்பதையும் ஆயிற்று

வாய்க்கவேண்டும்

காம்பு கழன்றபின்

தரை இறங்குமுன்

காற்றில் நழுவி வருமோர்

அந்தரப்பூ காணல்



ஒரு மலர் தானாக உதிர்ந்து மண்ணை அடையும் முன்பாக அதை அவதானித்திருத்தல் என்பது சவாலான தவம். அப்படியொரு அபூர்வமான நிகழ்வைப் போலவே பல கவிதைகளின்தொகுப்பாக உள்ளது இந்த நூல். நல்லதொரு வாசிப்பனுவத்தை தருகிறது அந்தரப்பூ.

No comments:

Post a Comment

Would you like to follow ?