மிடறு

ஒரு கோப்பைத் தேநீரின் கடைசி மிடறு 

கூடுதல் சுவையோடு இருக்கும்.

கடைசி மிடறு கூடுதல் புத்துணர்ச்சி தரும். 

கடைசி மிடறின் சுவை சில காலம் 

அடி நாக்கில் தங்கியிருக்கும்.

கடைசி மிடறு மனதை அமைதி கொள்ளச் செய்யும்.

கடைசிமிடறின் அற்புதங்களை 

அறியாதவர்கள் இதை சந்தேகிப்பதில் 

ஆச்சர்யங்கள் ஏதுமில்லை.

மாலையை கடந்து இரவுக்குள் நுழைந்ததை அறியாமல் 

மடிக்கணினியில் மூழ்கியிருக்கும் 

மென்பொறியாளன் அறிவான் 

குடிக்க முடியாதுபோன 

கடைசி மிடறின் பெருஞ்சுவையை.


Post a Comment

0 Comments