வல்லூறு, வானம்பாடி மற்றும் பலர்

கடந்த சில தினங்களுக்கு முன்பு, பறவைகள் ஆர்வலர் திரு.தியோடர்  பாஸ்கரன் அவர்களை அவருடைய இல்லத்தில் சந்தித்தேன். அவர் வீட்டுக்கு அருகிலேயே பறவைகளை வேடிக்கை பார்ப்பதற்காக சென்றோம். வானம்பாடியை எனக்கு அவர் தான் முதன் முதலில் அறிமுகப்படுத்தினார். நாங்கள் அந்த பறவையின் அருகில் சென்று நின்ற போதும், அந்த பறவை அங்கிருந்து நகர்ந்து போகமால் இருந்தது. அந்த பறவை எங்களை அறிந்த போதும், நாங்கள் இன்னும் அந்த பறவையை பார்க்கவில்லை என்று நினைத்துக்கொண்டு, அது பறந்து போகமாமல் இருப்பதாக சொன்னார், திரு.பாஸ்கரன் அவர்கள்.கடந்த சில மாதங்களாகவே பழனியில் நான் ஒரு பறவையை அடிக்கடி பார்ப்பதுண்டு. என்னுடைய இரு கண் நோக்கி மூலமாக அந்த பறவையை கவனித்து வந்தேன். ஆனால் எனக்கு அதன் பெயர் தெரியாது. திரு.பாஸ்கரன் அவர்களை சந்தித்த போது, அந்த பறவை எப்படி இருந்தது என்று அவருக்கு சொன்னேன். "பார்ப்பதற்கு புறாவை விட சற்றே பெரியதாக இருக்கும். அதன் அலகு பருந்துக்கு உள்ளது போல இருக்கிறது. அதன் மார்பு மற்றும் வயிற்று பகுதியில், புள்ளிகள் போல தென்படுகிறது. கழுதை திருப்புவது கழுகு போன்று உள்ளது. தென்னை மரங்களில் அமர்ந்திருக்கிறது." ஒரே வார்த்தையில் பதில் சொன்னார், அதன் பெயர் வல்லூறு. வல்லூறு என்ற வார்த்தை பரிச்சயமாக இருந்தாலும் இதன் பெயர் தான் வல்லூறு என்பதை தெரிந்து கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது.


பருந்துகளில் கூட இரண்டு முக்கியாமான வகைகள் உண்டு. நாம் அன்றாடம் பார்க்கும் அவற்றில் ஒன்று ஊர் பருந்து. மற்றொன்று செம்பருந்து. ஊர் பருந்து பெரும்பாலும் வேட்டையாடுவதில்லை. இறந்து கிடக்கும் ஏதேனும் உயிரினத்தை தின்று துப்புரவு செய்கிறது. எளிதில் காணக் கிடைக்கும் இது கருப்பு நிறத்தில் இருக்கும். உயரமாக பறந்து கொண்டிருக்கும். செம்பருந்தின் கழுத்து வெள்ளையாக இருக்கும். இவை வேட்டையாடி உண்ணும் விருப்பமுள்ளவை. இந்த தகவலையும் அவரே சொன்னார்.
சிறிது நேரம் பேசியதில் இருந்தே அவர் என்னை ஆச்சர்யப்படவைத்தார்.


Post a Comment

0 Comments