மயில் தோகை விரித்து ஆடுவதை ரசித்திருப்போம். ஆனால் இந்த விசிறிவால் குருவிகளை அதிகம் கவனித்திருக்க மாட்டோம். அதன் வாலை விசிறி போல (மயில் தோகை போல) விரிப்பதை பார்க்க அத்தனை அழகு.
தோகை விரித்தாடும்
நீலமயிலின் அழகை
பாடிச்சென்ற பெருங்கவிகள் யாரும்
அறிந்திருக்க வாய்பில்லை
விசிறிவால் குருவிகளை.
சிறியதே அழகு.
இன்னும் சிறியது பேரழகு.
பறவைகளின் உயிர்ச்சூழல் நூலில் இந்த கவிதை இடம்பெற்றுள்ளது. நான் படமெடுத்த விசிறிவால் குருவி இனங்கள். அவற்றின் வேறுபாடுகளை இந்த படங்களின் வழியாக நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
Spot-breasted Fantail, White-browed Fantail, Malaysian Pied-Fantail (இடமிருந்து வலமாக)
முதல் படம் பெங்களூரில். இரண்டாவது பழனிமலைத் தொடரில். மூன்றாவது சிங்கப்பூரில்.

0 Comments