மாங்குயில்

நான் அதிகம் ரசித்துப் பார்க்கும் பறவையினங்களில் மாங்குயிலும் ஒன்று. நான் பறவை இனங்களை அவதானிக்கத் தொடங்கிய காலத்தில் என் கவனத்தை அதிகம் ஈர்த்தது மாங்குயில். Indian Golden Oriole - மாங்குயில் இனத்தை பழனியில் என் வீட்டு வாசலில் முதல் முறையாக பார்த்தேன். அதன் பிறகு பழனிமலைத் தொடரின் அடிவாரப் பகுதிகளில் பலமுறை Black-hooded Oriole - மாங்குயில் இனத்தை பார்த்திருக்கிறேன்.

சிங்கப்பூர் வந்த பிறகு Black-naped Oriole மாங்குயில் இனத்தை தினசரி பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. இங்கு அவை எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. எப்போதும் அதன் குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

தொடர்ந்து இவற்றை அவதானித்ததன் விளைவாக, மாங்குயில் பற்றி நான் எழுதிய கவிதை தனித்து நிற்கிறது என்று நினைக்கிறன். பறவைகளின் உயிர்ச்சூழல் நூலில் அந்த கவிதை முதல் கவிதையாக இடம் பெற்றுள்ளது.

நான் படம் எடுத்த மூன்று மாங்குயில் இனங்கள்.

Black-hooded Oriole, Indian Golden Oriole, Black-naped Oriole (இடமிருந்து வலமாக)

முதல் இரண்டும் பழனிமலைத் தொடரில். மூன்றாவது சிங்கப்பூரில். இந்த படங்களின் வழியாக அவற்றின் வேறுபாடுகளை புரிந்து கொள்ள முடியும்.



Post a Comment

0 Comments