திரு.பாரதிதாசன் - சந்திப்பு

கடந்த வாரம் திரு.பாரதிதாசன் அவர்களை கோவையில் சந்தித்தேன். அருளகம் அமைப்பின் மூலமாக பாறுக் கழுகுகளை பாதுகாக்க கடுமையான முயற்சிகளை செய்து வருகிறார். அவருடைய பணி எவ்வளவு சவாலானது என்பதை நன்கு அறிவேன். அழிவின் விளிம்பில் இருக்கும் பாறுக் கழுகுகளை மீட்டெடுக்கும் முயற்சியில் தொடர்ந்து செயல்பட்டு வருபவர். 


அறுந்து விழும் பட்டம் தரையை தழுவும் முன், அதன் நூலைப் பற்றி மீண்டும் காற்றிலேற்றுவது போன்ற சவாலான பணி. அவர் ஒவ்வொரு நாளும் அதை செய்து வருகிறார். "பாறுக் கழுகுகளைத் தேடி" என்ற நூலை அவர் கைகளால் பெற்றுக் கொண்டது பெரு மகிழ்ச்சி. தமிழக அரசு அமைத்திருக்கும் "Raptors Research Foundation" குழுவில் அவர் இடம்பெற்றிருப்பது நம்பிக்கை அளிக்கிறது. அவருக்கு என் வாழ்த்துகள்..! 


Post a Comment

0 Comments