காட்டுமாடுகள்

அயல் மரச்செறிவுகளிடையே

வாழிடம் இழந்த காட்டுமாடுகள்,

நகருக்குள் வாழப்பழகிவிட்டன.

ஏரிச்சாலையில்

கன்றுகளோடு சுற்றித்திரிகிற

காட்டுமாடுகளை,

ஒளிப்படம் எடுக்கும் ஒருவன் 

காட்டெருமை என்கிறான்.

பேருந்திலிருந்து தலையை நீட்டி

பைசன் எனக் கூச்சலிடுகிறார்கள்

குழந்தைகள்.

பெயரிலும் அடையாளம் தொலைத்தவை,

சோளக்கருதை குப்பையில் 

தேடித்திரிகின்றன.


Post a Comment

0 Comments