நாமக்கோழி [Eurasian Coot]

வேட்டையாடும் பறவைகள் போல் 

கூர் நகமும் இல்லாது,

நீர்க்காகக் கால்களை போல் 

இடைச் சவ்வுமில்லாது,

தண்ணீரில் மிதப்பதற்கும் 

தரை மேல் நடப்பதற்கும் 

பரிணாமம் உறுதி செய்த 

பாதகங்களை பெற்றதனால்,

நன்னீரில் வாழுகின்ற 

நாமக்கோழி,

ஆகாயத் தாமரையிலும் 

தகவமைத்துக் கொள்கிறது.

படமும் தகவலும் : திரு.ரவீந்திரன் நடராஜன்

காட்டுக்கோழி

Post a Comment

10 Comments

 1. நாமக்கோழிகளின் கால்கள் மிக விசித்திரமானவை. மற்ற பறவையினங்களில் கால்களில் இருந்து அது மாறுபட்ட வடிவத்தைக் கொண்டு இருக்கும். கோழிகளின் கால்களை போல வெறும் கூரான நகங்களை கொண்ட விரல்களாகவோ, அல்லது வாத்துக்களின் கால்களை போன்று சவ்வுடைய பாதங்களை கொண்டு துடுப்பு போல செயல்படுவதாகவோ இல்லாமல் இவை மிக விசித்திரமாக இருக்கும். ஜேம்ஸ் பாண்ட் படங்களில் அவர் வைத்து இருக்கும் கார், நிலத்திலும் நீரிலும், ஆகாயத்திலும் பறப்பது போல வடிவமைக்கப்பட்டு இருக்கும். அது போல ஒரு அதிசய படைப்பே நாமக்கோழிகளின் கால்கள்.
  அவைகளின் கால்களில் உள்ள முண்டு போன்ற சதைப்பகுதிகள் மிதவையாகவும், விரல்களை இணைக்கும் சவ்வு பகுதிகள் நீரில் நீத்த துடுப்பு போன்றும், அகண்டு நீண்ட விரல்கள் நீர் தாவரங்களின் மேல் நடக்கவும், ஓடவும், நிலத்தில் செல்லவும் பயனுள்ள "ஆல் இன் ஒன்" கால்களாக உள்ளது. இதுவரை நாமக்கோழிகளின் கால்களை சரியாக காணாதவர்கள் இனி காணுங்கள், அவைகள் நீரின் மேல் எவ்வாறு ஒன்றை ஒன்று துரத்தி கொண்டு ஓடுகின்றன என்பது கூட புரியும்.
  நாமக்கோழி - Eurasian coot (Fulica atra), Madurai
  - Iragukal Raveendran Natarajan.

  ReplyDelete
 2. Wonderful writeup 😊

  ReplyDelete
 3. Beautiful lines as always! 😍

  ReplyDelete
 4. I would encourage you to do youtube and Insta vedios ,which can also be updated on your webpage. This will instantly increase the number of viewers and spread more awareness

  ReplyDelete