காட்டுப்பூனைகளும் குள்ளநரிகளும் 

காணாமல் போனபின்பு 

பாலை நிலத்தின் பல்லுயிர்ச்சூழல் 

சிதைந்து போனதனால் 

நிலமெங்கும் நீக்கமற 

நிறைந்துவிட்டன 

நீலமயில்கள் 





கூகை

பட்டாணிக்குருவி

வேதிவால் குருவி

சோலைபாடி

        தையல் குருவி

புதர்க்காடை

சிறிய மின்சிட்டு

சிரல்

சிற்றெழால்

இருவாச்சி