நாராய் நாராய் : திரு.ஆதி வள்ளியப்பன்

தமிழ் நாட்டில் காணப்படும் பல்வேறு பறவைகள் சரணாலயங்கள் மற்றும் தமிழ் நாட்டிற்கு வரும் வலசை பறவைகள் குறித்த எளிமையான புத்தகம் திரு.ஆதி வள்ளியப்பன் எழுதிய நாராய் நாராய்.

தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில கிராமங்கள் எப்படி பறவையினங்களை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கின்றன என விவரிக்கிறது இந்த புத்தகம். எது வெளிநாட்டுப் பறவை? என்ற கட்டுரை முக்கியமானது. இன்றளவும் ஊடகங்கள் கூகையை (Barn Owl) ஆஸ்திரேலியப் பறவை என்றே சொல்லிக் கொண்டிருக்கின்றன. எது வெளிநாட்டுப்பறவை எது உள்நாட்டுப்பறவை என்பதை விளக்கமாக எழுதியிருக்கிறார்.


சங்க இலக்கியங்களில் பறவைகள் பற்றி எழுதப்பட்ட பாடல்கள் மூலம், பறவைகளை எப்படி கூர்மையாக அவதானித்திருக்கிறார்கள் என விளக்குகிறார் ஆசிரியர். 

கூந்தன்குளம், வேடந்தாங்கல், பழவேற்காடு ஆகிய பறவைகள் சரணாலயங்கள் மற்றும் அங்குள்ள பறவைகள் பற்றி கட்டுரைகள் முக்கியமானவை. பறவைகளின் தமிழ் பெயர்களை சரியாக பயன்படுத்தியிருப்பதும், அவற்றை தொகுத்திருப்பதும் சிறப்பு.

புத்தகத்தை வாங்க : https://crownest.in/naaraai-naaraai-aadhi-valliappan/Post a Comment

0 Comments