Sep 27, 2020

ஓநாய் [Grey Wolf] - அயர்லாந்தின் இழப்பு [Ireland]

இந்திய, சீனா ,ஐரோப்பிய நாடுகள், கனடா என உலகின் பல நாடுகளிலும் காணப்படும் விலங்கு ஓநாய். அயர்லாந்தில் மனித இடையூறுகள் காரணமாக 250 ஆண்டுகளுக்கு முன்பே இவை அழிந்துவிட்டன. தற்போது இவற்றை மீண்டும் அயர்லாந்தில் உள்ள காடுகளில் அறிமுகப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. Yellow Stone தேசிய பூங்காவில் ஓநாய்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அந்த காடு மீண்டும் வளம்பெற்றது. 

ஓநாய்களை கொடூர விலங்காகவே பல கதைகளில் சித்தரிக்கப்பட்டுவிட்டது. உண்மையில் ஓநாய்கள் பல்லுயிர்ச் சூழலில் ஒரு அங்கம். ஓநாய்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இரை விலங்குகள் ஒரே இடத்தில் இருந்து, வளரும் சிறிய மரக்கன்றுகளை சேதப்படுத்தாமல் இருக்க வாய்ப்புண்டு. எனவே மரங்கள் செழித்து வளர ஓநாய்கள் மறைமுகமாக உதவும். 

Taxidermy Specimen of Grey Wolf at Zürich Zoological Museum

இந்தியாவிலும் ஓநாய்கள் உண்டு. ஆனால் அவை அதிகம் பேசப்படுவதில்லை. இந்தியா ஓநாய்களின் வாழிடம் நிச்சயம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. தமிழ்நாட்டிலும் ஓநாய்கள் இருந்தன. ஆனால் முற்றிலும் அற்றுப்போய்விட்டன. தமிழ்நாட்டில் ஓநாய்கள் எங்கு வாழ்ந்தன, எப்போது அழிந்து போயின என்ற தகவல்கள் இல்லை. 

Wolf in India - Photograph by Anil Tripathi 

கோவை சதாசிவம் அவர்கள் சொல்லும் இந்த கதை எல்லோரும் கேட்க வேண்டிய ஒன்று. ஓநாய்களை உணர மட்டுமல்ல. இயற்கையை உணரவும்  :  ஓநாய் கதை

மேலும் 


Sep 26, 2020

Portugal : Return of the Brown Bear [புதிய நம்பிக்கை ]

இரண்டு நூற்றாண்டுகளாக போர்ச்சுகல் தேசத்தில் பதிவு செய்யப்படாத கரடி தற்போது மீண்டும் வந்திருப்பது, அந்த நாட்டில் இயற்கை ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புவியின் வடகோளத்தில் காணப்படும் கரடி இனம் இந்த "Brown Bear". அதிக வேட்டை காரணமாக இதன் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் காணப்பட்ட இந்த இன கரடிகள் தற்போது வெகு சில இடங்களில் மட்டுமே காணப்படுகிறது.
Taxidermy Specimen of Brown Bear at Zürich Zoological Museum

போர்ச்சுகளை போலவே சுவிட்சர்லாந்திலும் முற்றிலும் அற்றுப்போன இந்த கரடிகள் தற்போது மீண்டும் தென்பட துவங்கியுள்ளது. ஸ்பெயின் நாட்டின் கேன்டாபிரைன் மலைத் தொடரில் இருந்து இந்த கரடி போர்ச்சுகல் நாட்டின் எல்லைக்குள் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் வாழிடத்தை பாதுகாப்பதும் இதன் எண்ணிக்கை அதிகரிப்பதும் போர்ச்சுகல் நாட்டின் கைகளில் தான் இருக்கிறது. தன் தேசத்தின் எல்லைக்குள் முற்றிலும் அற்றுப்போன உயிரினத்தை இயற்கை திரும்ப கொடுத்திருக்கிறது.

Sep 20, 2020

Peacock Flowers of Bangalore [பெங்களூரின் மயில்கொன்றைகள்]

இந்தியாவில் காணப்படும் மயில் கொன்றை [Peacock Flower (Caesalpinia pulcherrima) ] எனப்படும் மரம் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்தது. பல வண்ணங்களில் காணப்படும் இந்த மரங்களை பெங்களூரில் காண முடியும். பெங்களூரில் காணப்படும் பல அயல் தாவரங்களில் இதுவும் ஒன்று. பெங்களூரின் தட்வெப்பம் இந்த மரங்கள் செழித்து வளர உதவுகிறது.



Sep 15, 2020

Lion King - Pumbaa [Common Warthog]

Lion King  திரைப்படத்தில் வரும் Pumbaa-வை யாரும் மறந்திருக்க மாட்டோம். ஆப்ரிக்காவின் பெரும்பாலான நாடுகளில் காணப்படும் இந்த பன்றி இனத்தின் பெயர் :  Common Warthog.

Taxidermy Specimen of Common Warthog at Zürich Zoological Museum

இதன் தந்தங்களுக்காக இவை அதிகளவில் வேட்டையாடப்படுகின்றன.






Sep 5, 2020

Sep 5 2020 - Vultures Day [பாறு கழுகுகள் தினம்]

இந்தியா முழுக்க பல இடங்களிலும் பரவலாக காணப்பட்ட பறவையினம், பாறு கழுகுகள் அல்லது பிணந்திண்ணி கழுகுகள். தற்போது இந்தியாவில் இந்த பாறு கழுகுகள் 99% அழிந்துவிட்டது. வேட்டையாடப்பட்ட அல்லது இறந்த விலங்குகளை உணவாக உட்கொண்டு காட்டை துப்புரவு செய்யும் மிக முக்கியமான பறவையினம் பாறு கழுகுகள். 

கால்நடைகளுக்கு செலுத்தப்பட்ட "Diclofenac" என்ற மருந்தே இந்த பாறு கழுகுகள் அழிவுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. "Diclofenac" மருந்து செலுத்தப்பட்ட இறந்துபோன கால்நடைகளை உணவாக எடுத்துக்கொண்ட இந்த பாறு கழுகுகள் மிக வேகமாக அழிவை சந்தித்தன. தற்போது மிகவும் சொற்ப எண்ணிக்கையில் மிச்சம் இருக்கும் இந்த பாறு கழுகுகளை காப்பற்ற மிக கடுமையான முயற்சிகளை தன்னார்வு அமைப்புகள் எடுக்கின்றன. 

Red Headed Vulture - Nagarhole Tiger Reserve


இந்தியாவில் காணப்படும் பாறு கழுகுகள் :

Bearded vulture
Egyptian Vulture
White-rumped Vulture
Indian Vulture
Slender-billed Vulture
Himalayan Vulture
Griffon Vulture
Cinereous Vulture
Red-headed Vulture