Taxidermy Specimen of Asiatic Cheetah at Zürich Zoological Museum |
அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்
Aug 30, 2020
சிவிங்கப்புலி [Asiatic Cheetah] - இந்தியாவின் இழப்பு [India]
Aug 29, 2020
பங்குனி ஆமைகள் : கவிதை
அலைகடலின் நுரை ஒளியை
மரபணுவில் வைத்திருக்கும்.
இட்டுவைத்த முட்டைகளை
இயற்கையிடம் விட்டுவைக்கும்.
பல்லாயிரம் ஆண்டுகளாய்
பரிணமித்த உயிரனம்,
தெருவிளக்கின் வெளிச்சத்தால்
திசைமாறிச் செல்கிறது.
பட்டணத்தின் வீதியெங்கும்
பெருகிவிட்ட தெருநாய்கள்,
ஆமை குஞ்சுகளை
இரையாக்கி கொல்கிறது.
ஆமை நடை மூலமாக
முட்டைகளை மீட்டெடுத்து
அடைகாக்கும் மனிதர்கள் -
கடலை உயிர்ப்பிக்கும்
கற்றுணர்ந்த காவலர்கள்.
வங்கக் கடற்கரையில்
வாழிடம் தொலைத்துவிட்டு
மக்காத குப்பையிடையே
மணற்பரப்பில் இடம்தேடும்
பருவநிலை பிறழ்வறியா
பங்குனி ஆமைகள்.
அலைகடலின் நுரையொளியை
மரபணுவில் வைத்திருக்கும்.
இட்டுவைத்த முட்டைகளை
இயற்கையிடம் விட்டுவைக்கும்.
- பா.சதீஸ் முத்து கோபால்
குறிப்பு :
பங்குனி ஆமைகள்: Olive Ridley Sea Turtle (Lepidochelys olivacea)
IUCN Status: Vulnerable
![]() |
Thanks to Aravind Manoj for the photograph |
Aug 22, 2020
Saiga - சீனாவின் இழப்பு [China ]
மத்திய ஆசிய பகுதிகளில் பரந்த புல்வெளிகளில் [open dry steppe grasslands] வாழும் இரலை [Antelope ] விலங்கு Saiga. பெரும்பாலும் இரண்டு குட்டிகளை ஈனும். இதன் நீண்ட மூக்கு பல மைல் தூரத்தில் இருக்கும் புல்வெளிப்பகுதிகளையும் அறிந்து அதற்கேற்ப இடம்பெயர உதவுகிறது. ஆண் மான்களுக்கு மட்டுமே கொம்பு உண்டு. இதன் கொம்புகள் மருத்துவ குணமுடையது எனக் கூறி ஆண் இரலைகள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டதன் விளைவாக சீனாவில் இந்த விலங்கு முற்றிலும் அழிந்துவிட்டது.
Taxidermy Specimen of Saiga at Oslo Natural History Museum |
கஸக்கஸ்தான் நாட்டில் இவை காணப்பட்டாலும் அங்கும் அழிவையே சந்திக்கிறன்றன. வித்தியாசமான முக அமைப்பு கொண்ட இந்த விலங்கு அதிக அளவில் நோய் தாக்குதலுக்கும் உள்ளாகின்றன. கஸக்கஸ்தானில் மட்டும் 2015-ஆம் ஆண்டு சுமார் இரண்டு லட்சம் Saiga இரலைகள் உயிரிழந்தன.
பருவநிலை பிறழ்வு (Climate Change) காரணமாக இதன் வாழிடத்தில் ஏற்படும் மாற்றங்கள் இவற்றின் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. நெடுஞ்சாலைகள் மற்றும் புதிய நீர்வழித்தடங்கள் ஆகியவற்றால் இதன் வலசை (Migrate) பாதைகள் மறிக்கப்பட்டு மிக அதிக அளவில் இதன் குட்டிகள் அழிந்துபோகின்றன.
சீனாவில் மருத்துவம் என்ற பெயரில் காட்டுயிர்கள் பலவும்அழிவை சந்திக்கின்றன. இதற்கு புலிகள் முதல் அழுங்கு (Pangolin) வரை பல காட்டுயிர்களை உதாரணமாக சொல்லலாம். சீனாவின் இந்த போக்கினால் சீனாவில் மட்டுமல்லாது மற்ற நாடுகளிலும் காட்டுயிர்கள் பலவும் அழிவை சந்திக்கின்றன.
Saiga : IUCN Status: Critically Endangered
Aug 15, 2020
Sumatran Rhinoceros - மலேசியாவின் இழப்பு [Malaysia]
ஜாவா காண்டாமிருகங்களை போலவே சுமத்ரா காண்டாமிருகங்களும் தென் கிழக்கு ஆசியாவின் பல நாடுகளிலும் காணப்பட்டன. தற்போது இந்தோனேசியாவில் சிறு சிறு குழுக்களாக 80-க்கும் குறைவான எண்ணிக்கையில் அழிவின் விளிம்பில் உள்ளன.
பருவநிலை பிறழ்வு [Climate Change] காரணமாக ஏற்படும் வெள்ளம், வறட்சி, இயற்கை பேரிடர்களான சுனாமி, மனிதர்களால் ஏற்படுத்தப்படும் காட்டுத்தீ, கால்நடைகளுக்காக காடுகளை அழிப்பது என பல காரணங்களால் இதன் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் மிக முக்கிய காரணம் வேட்டையே. சுமத்ரா காண்டாமிருகம் மருத்துவ குணமுடையது என்ற மூடநம்பிக்கையின் காரணமாக அதிகளவில் தெற்காசியா முழுவதும் வேட்டையாடப்பட்டது.
மற்ற காண்டாமிருகங்களை ஒப்பிடும்போது அளவில் சிறியவை சுமத்ரா காண்டாமிருகம். 2015-ஆம் ஆண்டு மலேசியாவில் இருந்து இவை முற்றிலும் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இவற்றை பாதுகாக்க கடைசியாக எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன.
Taxidermy Specimen of Black Rhinoceros (Diceros bicornis) [Left] and Sumatran Rhinoceros (Dicerorhinus sumatrensis) [Right]
|
செம்பனை மரங்களில் பெறப்படும் எண்ணெய் [Palm Oil] அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால் மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் அதிக அளவில் காடுகள் அழிக்கப்பட்டு சுமத்ரா காண்டாமிருகத்தின் வாழிடம் சுருங்கி, அவை தற்போது தொடர்பற்று இருப்பது அழிவுக்கே வழிவகுக்கும் என கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எனவே தற்போது இவற்றை காப்பதற்காக இவற்றை காப்பகங்களில் [Captive Breeding] வைத்து இனப்பெருக்கம் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அழிவின் விளிம்பில் இருக்கும் ஜாவா காண்டாமிருகம் மற்றும் சுமத்ரா காண்டாமிருகம் என இரண்டு இனங்களையும் பாதுகாக்கும் பொறுப்பு தற்போது இந்தோனேசியாவிடம் இருக்கிறது.
Sumatran Rhinoceros: IUCN Status: Critically Endangered
Aug 9, 2020
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு 2020
பருவ நிலை பிறழ்வு [Climate Change] குறித்து உலகில் பல்வேறு வல்லுனர்களும் எச்சரித்து வரும் இந்த வேலையில் சுற்றுச் சூழல் தொடர்பான சட்டங்களை கடுமையாக்கவே அரசுகள் முயற்சி செய்ய வேண்டும். உயர்ந்து வரும் வெப்பநிலை, அவ்வப்போது ஏற்படும் பேரிடர்கள் பருவ நிலை பிறழ்வை தொடர்ந்து உறுதி செய்து வருகிறது. வளர்ந்த முதலாம் உலக நாடுகள் தங்கள் நிலப்பரப்பை மாசுபடாமல் பாதுகாக்க மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்ள தொடங்கிவிட்டன. அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து நாடுகளில் வாழும் மக்கள் மொத்தமாக இந்த உலகில் உற்பத்தி செய்யப்படும் 80 சதவீதத்தை நுகர்வதாக ஆய்வு சொல்கிறது.
இதற்காக மூன்றாம் உலக நாடுகள் தங்கள் சுற்றுச் சூழலை பணயம் வைக்கின்றன. மூன்றாம் உலக நாடுகளில் மக்கள் அடர்த்தி அதிகம் என்பதும், வேலை வாய்ப்பை அதிகரிப்பது அவசியம் என்பதும் உண்மை தான். தற்போது மத்திய அரசு அறிவித்திருக்கும் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு வரைவு 2020 அந்நிய முதலீடுகளை கொண்டுவரும் என்பதும், அதன் மூலமாக புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்பதும் அவர்கள் வாதமாக இருக்கலாம். ஏற்கனவே இருக்கும் சுற்றுச் சூழல் சட்டங்களே நமக்கு போதுமானதாக இல்லை என்பதை நாம் கண் கூடாக அனுபவித்து வருகிறோம்.
மனிதனின் அடிப்படை தேவையான தூய்மையான நீரை ஏன் அரசால் இன்னும் முழுமையாக கொடுக்க முடியவில்லை ? நம்முடைய நீர் நிலைகள் யாவும் மாசுபட்டது தான் நம் வளர்ச்சியின் அடையாளமா ? புதிய அந்நிய முதலீடுகள் தொழில் வாய்ப்புகளை அதிகரித்து வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம். ஆனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இதன் மூலமாக அடையும் பயனை முழுமையாக அனுபவிக்க முடியாது. ஏனென்றால் அவர்களின் வருமானத்தை மீண்டும் தூய நீருக்காகவும், மருத்துவத்துக்காகவும் செலவு செய்ய வேண்டி வரும். சுற்றுச் சூழலை சீரழித்து உருவாகும் வளர்ச்சி எப்படி நீடித்த வளர்ச்சியாக இருக்க முடியும் ?
சுற்றுச் சூழலை பாதுகாக்காமல் ஏழ்மையில் இருப்பவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொண்டுவர முடியாது. புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் B2 பிரிவில் மக்கள் கருத்து கேட்பு அவசியமில்லை என்று சொல்வது மக்களுக்கு சுற்றுச் சூழலின் உரிமைகளை பறிப்பதாகவே உள்ளது. தற்போது அரசு அறிவித்திருக்கும் வரைவை திரும்பப்பெற்று சுற்றுச் சூழலை பாதுகாக்க கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டியது காலத்தின் தேவை.
#WithdrawEIA2020Draft
Read more Articles...
- The Remaining Grasslands of Palani hills
- The Mudflats of Singapore
- The little-known tressures of Kongur Lake
- The Gateway to Paradise
- Reflections from a museum [Zürich, Switzerland]
- Reclamation in Kuthiraiyar
- Palani Hills : Shrinking Heaven
- Painted Beauty
- Melodies of Bombay Shola
- Lunch with a Falcon
- Incidental Lifers
- Glatt : A Swiss River
- Fort Canning Park [Singapore]
Birds of Palani Hills
- Birds of Palani Hills - Page 1
- Birds of Palani Hills - Page 2
- Birds of Palani Hills - Page 3
- Birds of Palani Hills - Page 4
- Birds of Palani Hills - Page 5
- Birds of Palani Hills - Page 6
- Birds of Palani Hills - Page 7
- Birds of Palani Hills - Page 8
- Birds of Palani Hills - Page 9
- Birds of Palani Hills - Page 10
- Birds of Palani Hills - Page 11
- Birds of Palani Hills - Page 12