கசாப்புக்குருவி [Brown Shrike]

இரைக்கொல்லும் குணமும் 

கூரியதொரு சிறு அலகும் 

பருந்தைப்போலிருந்தாலும்,

சிறுபறவைகளின் உடல்பற்றி 

சதை கிழிக்கும் கால் நகங்கள் 

பரிணாமத்தில் தவறியதால்,

வேட்டையாடிய சிற்றுயிர்களை 

முட்செடிகளில் சிக்கவைத்து

ஊன் உண்ணும்,

கசாப்புக்குருவி..!!


Post a Comment

4 Comments