நெடுமரக் கிளைகளில்
அலைந்திடும்
மலை நாகணவாய்

பிடிபடும் சில பறவைகள்
பேசிடும்
பலர் குரலாய்

அடைபடும் அதன் சிறகுகள்
துடித்திடும்
சுடு நெருப்பாய்

விடுதலை எனுங்கனவினை 
சுமந்திடும் 
மலை நாகணவாய்.