புகையும் சிகரட் துண்டிலிருந்து

பற்றி எரியும் மலைக்காட்டில் 

புற்கள், சிறு செடிகள் 

பெரு மரங்கள்

என யாவும் கருகியபின்,

நெருப்பின் நிறங்கொண்ட பறவை

தேடி அலைவது

தன் கூட்டை மட்டுமல்ல.

Thanks to Nooparan for the photograph